Top Cook Dupe Cook: "சினிமாவுக்கு வந்துட்டா மானம், ரோஷத்தை மூட்டைக் கட்டி வைச்சி...
BB Tamil 9: ``இங்கத்தான் பிக் பாஸ் டைட்டில் வின் பண்ணுவாங்க'' – பிரவீன் ராஜ் சொல்வது யாரை?
பிக் பாஸில் கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறியிருந்தனர். இதில் பிரவீனை வெளியேற்றியிருப்பது அன்ஃபேர் ( Unfair) என மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் விஜய் டிவிக்கு பிரவீன் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.
அதில், "நம்மள நாமே ரொம்ப கம்மியா எடைப்போட்டுடோம்'னு தோணுது. நமக்கு கெப்பாசிட்டி இருந்தும் ஒழுங்காகப் பண்ண முடியலையோனு நினைக்கிறேன்.
நான் மறுபடியும் உள்ள போனால் பிக் பாஸ் இன்டர்வியூல கொடுத்த வாக்கை காப்பாத்துவேன்" என்றிருக்கிறார்.

தொடர்ந்து தொகுப்பாளரின் ரேபிட் ஃபயர் ரவுண்ட் கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.
அதாவது "யார் பிக் பாஸ் வீட்டில எமோஷனலைக் கட்டுபடுத்தி அவுங்க உண்மையான முகத்தை மறைச்சுகிட்டு இருக்காங்க?" என்ற கேள்விக்கு, ரம்யா என்ற பதிலை பிரவீன் அளித்திருக்கிறார்.
"யார் ரொம்ப நாடகமாடுகிறார்" என்ற கேள்விக்கு, கனி திரு என்றிருக்கிறார்.
உங்களுக்கு ஒரு "ஸ்வாப் கார்டு கொடுத்தால் யாரை மாற்றுவீங்க" என்ற கேள்விக்கு பிரவீன் கம்ருத்தீனை சொல்லி இருக்கிறார்.
"பெஸ்ட் என்டர்டெயினர் யாரு?" என்ற கேள்விக்கு பார்வதி என்று பதிலளித்திருக்கிறார்.
"யார் டைட்டில் வின் பண்ணுவாங்க" என்ற கேள்விக்கு பிரவீன் வியானாவை சொல்லி இருக்கிறார்.


















