குடும்பத்தையும், அரசியலையும் துறக்கிறேன்: லாலு பிரசாத்திற்கு சிறுநீரகம் தானம் செ...
"வி.சேகர் சார் ஒரு போராளி; அவர் இல்லைன்னா இயக்குநர் சங்கம் இல்ல" - இயக்குநர் சேரன்
'வரவு எட்டணா செலவு பத்தணா', 'விரலுக்கேத்த வீக்கம்' உள்ளிட்ட பல குடும்பப் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் வி.சேகர்.
இவர் உடல்நலக்குறைவால் நேற்று (நவ.14)காலமானார். சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்தும், நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு இயக்குநர் சேரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

"சேகர் சாரின் மறைவு பெரும் துயரமானது. மக்களுக்கு அவர் குடும்பப்பாங்கான படம் எடுத்த இயக்குநராகத் தான் தெரியும்.
ஆனால் எங்களுக்கு அவர் ஒரு போராளியாகத் தான் தெரிவார். இயக்குநர் சங்கம் இவ்வளவு தூரம் கட்டமைத்து ஒரு சங்கமாக தனித்து இயங்குகிறது என்றால் அதற்கான அடித்தளம் அமைத்தத்தில் சேகர் சாருக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது.
அவர் இல்லை என்றால் இயக்குநர் சங்கம் இல்லை. குடும்பப் படங்களை எடுத்திருந்தாலும் கம்யூனிச சிந்தனை உள்ள ஒரு நபர்.
முதலாளிகளிடமும், தொழிலாளிகளிடமும் என்ன பேச வேண்டும் என்று புரிந்துகொண்டவர்.

ரொம்ப வருடம் ஊதியத்தொகை பற்றிய பிரச்னையை அவர் தான் பேசியிருக்கிறார். அவருடைய இந்த இழப்பு எங்களுக்கு, எங்களின் சங்கத்திற்கு பெரிய இழப்பு.
அவருடைய புகழ் எங்களுடைய இயக்குநர் சங்கம் இருக்கும் வரைக்கும் இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.





.jpg)













