Bhgayashri Borse: 'டைரி மில்க் விளம்பரம் டு டோலிவுட்'; புதிய சென்சேஷன் 'காந்தா' ...
தொல்காப்பியம் முற்றோதல்: `1602 நூற்பாக்களை மனப்பாடமாக ஓதி' 10-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி சாதனை!
சிப்பிப்பாறை அரசுப்பள்ளி பயிலும் 10-ம் வகுப்பு மாணவி உமா மகேஸ்வரியின் தொல்காப்பியம் முற்றோதல் (ஒப்புவித்தல்) நிகழ்ச்சி, சிவகாசி தனியார் கல்லூரி அரங்கில்நடைபெற்றது.
முதுகலைத் தமிழ்துறை, தமிழாய்வு மையம், தொல்காப்பிய மன்றம், கரிசல் இலக்கிய கழகம் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்ட முன்னாள் ஆட்சியரும் சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) ஜெயசீலன் கலந்து கொண்டார்.

சாத்தூர், வெம்பக்கோட்டை அருகே உள்ள சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி உமா மகேஸ்வரி (15), தொல்காப்பிய இலக்கியத்தில் சொல்லதிகாரத்தில் உள்ள 456 நூற்பாக்கள், எழுத்ததிகாரத்தில் உள்ள 483 நூற்பாக்கள், பொருளதிகாரத்தில் உள்ள 656 நூற்பாக்கள் என மொத்தம் 1602 நூற்பாக்குகளை சுமார் இரண்டரை மணி நேரத்திற்குள் முற்றோதல் ஒப்புவித்து சாதனை படைத்தார்.
மனைவியின் தொல்காப்பிய முற்றோதல் சாதனையை ஆல் இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் புதுச்சேரி, தேனி வயத் தமிழ் சங்கம், உலகத் தொல்காப்பிய சாதனையாளர்கள் பேரவை ஆகியவை கண்காணித்து அங்கீகரித்தன.
தொல்காப்பியம் முற்றோதல் செய்த மாணவி உமா மகேஸ்வரிக்கு ஜெயசீலன் I.A.S., பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, கல்லூரி முன்னாள் மாணவர் மன்றம் மற்றும் தமிழறிஞர்கள் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

ஆசிரியர்கள் சார்பில் ராஜசேகர், ஜான்சி ராணி தங்கக் காதணியும், கல்லூரி சார்பில் மிதிவண்டியும் மாணவிக்கு வழங்கப்பட்டது. மேலும் பல தமிழறிஞர்களிடமிருந்து உமா மகேஸ்வரிக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளது.















