Bhgayashri Borse: 'டைரி மில்க் விளம்பரம் டு டோலிவுட்'; புதிய சென்சேஷன் 'காந்தா' ...
`இலையை வைத்து இசை' இணையவாசிகளிடம் கவனம் பெற்ற நபர் - வன அதிகாரி பகிர்ந்த வீடியோ வைரல்
விலை உயர்ந்த கருவிகள் இல்லாமல் சிறிய இலையை வைத்து பலரும் மெய்ப்பிக்கும் வகையில், புலிகள் காப்பக வழிகாட்டி ஒருவர் இனிமையான இசையை வாசிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்திய வன அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த இந்த வீடியோ இணையவாசிகளிடம் கவனம் பெற்று வருகிறது.
இந்திய வனப் பணி அதிகாரி பர்வீன் கஸ்வான், தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, அதில், ஜேம்ஸ் பூட்டியா என்ற புலிகள் காப்பக வழிகாட்டி, ஒரு மரத்தின் இலையை வைத்து, புல்லாங்குழல் போல ஒரு மெல்லிய இசையை எழுப்புகிறார். தனது திறமையை வெளிப்படுத்த இவருக்கு எந்த இசைக்கருவியும் தேவையில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
Meet James Bhutia, a guide in Tiger Reserve. He doesn’t need an instrument to show his talent. pic.twitter.com/BpM8Wbtltg
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) November 16, 2025
இந்த வீடியோ பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே பல்லாயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றது. பல இணையவாசிகள் ஜேம்ஸின் திறமையைப் பாராட்டி அந்த வீடியோவின் கீழ் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
















