செய்திகள் :

Happy Hearts: அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் ‘ஹேப்பி ஹார்ட்ஸ்’ அறிமுகம்

post image

அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை (Apollo Children’s Hospital) குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில், அப்போலோ ஷைன் அறக்கட்டளையுடன் (Apollo Shine Foundation) இணைந்து, ’ஹேப்பி ஹார்ட்ஸ்’ (Happy Hearts) என்னும் இதயங்களை அன்பினால் நெகிழ வைக்கும் ஒரு தனித்துவமிக்க முன்முயற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘ஹேப்பி ஹார்ட்ஸ்’ என்பது  பள்ளி மாணவர்களையும் இளம் மருத்துவ பயனாளர்களையும் நினைவில் நிற்க செய்யும் கடிதங்கள், அன்பின் வெளிப்பாடான புன்னகைகள் மற்றும் ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொள்வதால் உண்டாகும் மறக்க முடியாத மகிழ்ச்சிகரமான தருணங்கள் மூலம் ஒரு உன்னதமான உறவில் ஒன்றிணைக்கும் ஒரு முன்முயற்சி திட்டமாகும்.

அப்போலோ

’ஹேப்பி ஹார்ட்ஸ்’ திட்டத்தின் நோக்கம், பள்ளி மாணவர்களைக் குழந்தைப் பருவத்தில் இருக்கும் மருத்துவ பயனாளர்களுடன் நேரம் செலவிட செய்வதன் மூலம் அவர்கள் கவலைகளை மறந்து மகிழ்ச்சிகரமான தருணங்களில் திளைக்கவும், நம்பிக்கையூட்டும் கடிதங்களை பரிமாறிக் கொள்ளவும், தங்களது ஆசைகளை எல்லோருக்கும் தெரியும்படி புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் சுவற்றில் எழுதி வெளிப்படுத்துவதற்கான 'விஷ் வால்' (Wish Wall)-ல் பகிர்ந்து கொள்ளவும் அவசியமான தளத்தை உருவாக்குவதே.

இந்த முன்முயற்சியை ஊக்குவிப்பதன் மூலம், அன்பு, இரக்கம், ஆழந்த உறவு மற்றும் உணர்வு ஆகியவற்றின் வாயிலாக மருத்துவத்தை முன்னெடுப்பதாகும்.  அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் அன்பையும், ஆதமார்த்தமான உணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த விஷ் வால், சென்னையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் உருவாக்கிய மனதைக் கவரும் வாழ்த்து செய்திகள் மற்றும் வண்ணப்படங்களை காட்சிப்படுத்துகிறது ஒவ்வொரு குறிப்பும், வகுப்பறைகளில் உள்ள குழந்தைகளுக்கும் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கும் இடையே அன்பையும், பரிவையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு பாலமாக அமைந்திருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். தங்களது கைவண்ணத்திலான கடிதங்களைக் கொண்டு வந்த மாணவர்கள், குழந்தைப் பருவ மருத்துவ பயனாளர்களுடன் உற்சாகமாக உரையாடினர்.  மனம்விட்டு அன்பைப் பகிர்ந்து கொள்ளும் கதைகள், வலிகளை மறக்க செய்யும் சிரிப்பு மற்றும் உற்சாகமளிக்கும் வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில், மருத்துவம் மட்டும் குணப்படுத்துவதில்லை அன்பும் அதில் இருக்க வேண்டுமென்பதை அனைவருக்கும் நினைவூட்டினர்.

Happy Hearts
Happy Hearts

இளம் பார்வையாளர்கள் உற்சாகமூட்டும் பாடல்களைப் பாடினர்., கவிதைகளை வாசித்தனர், மேலும் மருத்துவ சிகிச்சை பெறும் குழந்தைகளிடையே மகிழ்ச்சியை உருவாக்குவதற்காகவே வடிவமைக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொண்டனர். இதனால் மருத்துவமனை வார்டுகளில் இசை, சிரிப்பு மற்றும் நம்பிக்கை எதிரொலித்தது, இது அந்த நாளை ஒற்றுமை மற்றும் பரிவுக்கான கொண்டாட்டமாக மாற்றியது.

கரடி டேல்ஸின் (Karadi Tales) இயக்குனர் திருமதி. ஷோபா விஸ்வநாத் மற்றும் விஜய் டிவி ஜூனியர் சூப்பர் சிங்கர் செல்வி. நேஹா கிரீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, ’ஹேப்பி ஹார்ட்ஸ்’ முன்முயற்சியை கொண்டாடும்வகையில், அன்பையும் அரவணைப்பையும், பகிர்ந்து கொண்டனர்.

’ஹேப்பி டேய்ஸ்’ நிகழ்வில் பேசிய டாக்டர். இளாக்குமரன் கலியமூர்த்தி கூறுகையில், “அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில், உண்மையாக குணமடைவது என்பது மருத்துவத்திற்கு அப்பாற்பட்டது என்றும், அது பரிவு, உறவு மற்றும் அக்கறை ஆகியவற்றின் மூலம் பெரும் பலன்களை அளிக்கிறது என்பதை நாங்கள் எப்போதும் நம்புகிறோம்.

ஹேப்பி ஹார்ட்ஸ்' முன்முயற்சியின் மூலம், ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி மற்றும் புரிதல் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளும் தருணங்களில் மாணவர்களையும் இளம் மருத்துவ பயனாளர்களையும் ஒன்றிணைப்பதன் மூலம் நாங்கள் இந்த ஆத்மார்த்தமான உறவை  வலுப்படுத்துகிறோம். இந்தக் முன்முயற்சியை சென்னையில் உள்ள அனைத்து அப்போலோ மருத்துவமனைகளிலும் மேற்கொண்டு, ஒவ்வொரு மருத்துவ பயனாளர்களுக்கும் பரிவும், அக்கறையும், உணர்வுப்பூர்வமான ஆதரவும் கிடைக்கச் செய்யும் கலாச்சாரத்தை முன்னெடுக்க வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியோடு இருக்கிறோம்,” என்றார்.

அப்போலோ

இந்தத் தொடக்க நிகழ்வு, ஒரு நகர அளவிலான மாபெரும் இயக்கத்தின் தொடக்கமாக அமைகிறது, இதில் சென்னை முழுவதும் உள்ள அப்போலோ மருத்துவமனைகளுக்கு வழக்கமான பள்ளிப் பயணங்கள் மூலம் வருகைத்தரும், மாணவர்கள் தங்களது கடிதங்கள், கலை மற்றும் மகிழ்ச்சி நிறைந்த செயல்கள் மூலம் மருத்துவப் பராமரிப்பில் உள்ள குழந்தைகளுக்கு தங்கள் அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள்.

’ஹேப்பி ஹார்ட்ஸ்’ மூலம், அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை மீண்டும் ஒருமுறை முழுமையான குணப்படுத்துதலில் கொண்டிருக்கும் தனது உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது. இது மருத்துவ பயனாளர்கள் நலமடைய உதவுவதோடு மட்டுமில்லாமல், நெகிழ்ச்சி, இரக்கம் மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றையும் கொண்டாடுகிறது.

அப்போலோ மருத்துவமனை பற்றி:

1983 -ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் முதல் அப்போலோ மருத்துவமனையைத் [Apollo Hospitals Enterprise Ltd. (Apollo)] தொடங்கியதன் மூலம், இந்திய மருத்துவ உலகில் அப்போலோ ஒரு மிகப் பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்று இந்தியாவின் மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அப்போலோ மருத்துவமனைகள், 10,400-க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 74 மருத்துவமனைகள், 6,600-க்கும் அதிகமான மருந்தகங்கள், 264--க்கும் அதிகமான கிளினிக்குகள் மற்றும்  2,182-க்கும் அதிகமான டயக்னோஸ்டிக் மையங்கள், 800-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள், என இந்தியாவின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ முன்னணியில் உள்ளது.

Happy Hearts
Happy Hearts

3,00,000-க்கும் அதிகமான அஞ்சியோப்ளாஸ்ட்களும், 2,00,000—க்கும் அதிகமான இதய அறுவைச் சிகிச்சைகளையும் செய்திருப்பதன் மூலம் உலகின் முன்னணி இதய நோய் சிகிச்சை மையமாக முக்கியத்துவம் பெற்றிருப்பதோடு, புற்று நோய் சிகிச்சையில் உலகின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையாகவும் திகழ்கிறது. நவீன கால தொழில்நுட்பங்கள், மருத்துவ கருவிகள், சிகிச்சை நடைமுறைகளின் மூலம் உலகத்திலேயே சிறந்த ஆரோக்கிய சேவையை நோயாளிகள் பெறும்வண்ணம் அப்போலோ ஆராய்ச்சிகளில் தொடர்ந்து பெரும் முதலீடு செய்து வருகிறது. அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் 1,20,000 உறுப்பினர்கள் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சைகளைத் தந்து வருகின்றனர். 

சி.கே. குமாரவேல் குடும்பத்தின் ‘நெக்ஸ்ட்பேஸ்’- அதிநவீன தோல் பராமரிப்பு பிராண்ட் அறிமுகம்

இந்தியாவின் இளம் தலைமுறை அழகு, அடையாளம் மற்றும் தொழில்நுட்பத்தை ஒன்றிணைத்து புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இருப்பினும், இந்தத் தலைமுறை ஆன்லைனில் அழகு மற்றும் தங்களுக்கான தனிப்பட்ட பராமரி... மேலும் பார்க்க

`என் அம்மா பெருமைப்படுவார்' - ரூ.4000 கோடியில்; 55 மாடி - ஷாருக்கின் பெயரை வைக்கும் நிறுவனம்

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் உலகத்திலேயே மிகப்பெரிய பணக்கார நடிகராக அறியப்படுகிறார். அவரது புகழ் இந்தியா மட்டுமல்லாது வளைகுடா நாடுகளிலும் வெகுவாக பரவியிருக்கிறது. இதனால் ஷாருக் கானின் படங்களுக்கு வெளிந... மேலும் பார்க்க

91 வயதிலும் தளராத உறுதி: `உழைப்புக்கு வயது தடையல்ல'- முதியவர் குறித்து நெகிழ்ந்த மாதவன்

'வயது என்பது வெறும் ஓர் எண்ணே' என்ற பொதுவான கூற்றுக்குச் சிங்கப்பூரில் வாழும் 91 வயது முதியவர் ஒருவர் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார். தான் ஓய்வெடுக்க வேண்டிய இந்த முதுமைக் காலத்திலும், நாள் ஒன்று... மேலும் பார்க்க

துபாயில் ஷாருக் கான் பெயரில் பிரமாண்ட கோபுரம் - மும்பையில் நடந்த கோலாகல விழாவில் நடிகர் நெகிழ்ச்சி

பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக் கான் பெயரில் துபாயில் ஒரு பிரமாண்டமான சொகுசு குடியிருப்பு கோபுரம் கட்டப்பட உள்ளது. "ஷாருக்ஸ் டான்யூப்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தின் அறிமுக விழா, மும்பையில் ... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய `எமிரேட்ஸ் தொழிலாளர் விருது' வென்ற கேரள இளைஞர் - யார் இவர்?

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த இந்தியர் ஒருவர், அந்நாட்டின் மதிப்புமிக்க தொழிலாளர் விருதை வென்றுள்ளார். தொழிலாளர் சந்தை மற்றும் சமூகத்திற்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக இ... மேலும் பார்க்க

சாலையோரம் கீபோர்டு வாசித்து தெருநாய்களின் பசியை போக்கும் முதியவர் - யார் இவர்?

கொல்கத்தாவின் பரபரப்பான தெருக்களில், 73 வயதான சுப்ரதா என்பவர் கீபோர்டு மற்றும் மௌத் ஆர்கன் வாசித்து வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை தெருநாய்களுக்கு உணவளிக்க பயன்படுத்தி வருகிறாராம். கடந்த 35 ஆ... மேலும் பார்க்க