``ஈரானைவிட இஸ்ரேல் அச்சுறுத்தலானது" - 200 வருட பழைமையான ஆக்ஸ்போர்ட் யூனியனில் தீ...
பீகார் தேர்தல்: `உலக வங்கி நிதி ரூ.14,000 கோடி கடன் வாங்கி செலவு' - பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி யாரும் எதிர்பாராத அளவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
`இந்த வெற்றியில் தேர்தல் ஆணையத்தின் பங்கு இருப்பதாகவும், இது முறைகேடான வெற்றி' என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பேசி வருகின்றன.
அந்தவகையில் தேர்தல் வியூக வகுப்பாளராக அறியபடும் பிரசாத் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, `தேர்தலில் உலக வங்கியின் 14,000 கோடி ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது.' என்று குற்றம்சாட்டியுள்ளது.
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பெண்களுக்கு ரூ.10,000 வழங்குவதற்காக இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் சமீபத்தில் முடிவடைந்த தேர்தலைப் பாதித்திருப்பதாக ஜன் சுராஜ் கட்சி கூறுகிறது.
"இது அரசு பணத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தேர்தல் செயல்முறையைத் திசைதிருப்பும் முறைகேடான முயற்சி" எனக் கூறியுள்ள ஜன் சுராஜ், இதில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், முக்யமந்திரி மஹிலா ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் கீழ், 1.25 கோடி பெண் வாக்காளர்களின் கணக்குகளுக்கு ரூ.10,000 பரிமாற்றம் செய்திருக்கிறது. இது என்.டி.ஏ-வின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்களித்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தலுக்கு முன்னதாக, நிதிஷ் குமார் அரசாங்கம், முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனாவின் கீழ் இந்த நடவடிக்கை பல ஆய்வாளர்களின் கூற்றுப்படி, NDA மீண்டும் ஆட்சிக்கு வருவதில் முக்கிய பங்கு வகித்தது.
நேற்று (நவ.15) நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜன் சுராஜ் கட்சியின் தேசியத் தலைவர் உதய் சிங், "இந்த தேர்தல் முடிவுகள் மிகுந்த சிரத்தை எடுத்து பெறப்பட்டுள்ளன. ஜூன் 21 முதல் வாக்குப்பதிவு நாள் வரை, இதற்காக கிட்டத்தட்ட ரூ.40,000 கோடி செலவிடப்பட்டது. அடிப்படையில் அரசாங்கத்தின் பணத்தை கொடுத்து மக்களின் வாக்குகளை வாங்கியுள்ளனர். உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட நிதிகள் இந்த பணப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் எனக்கு தெரிய வந்துள்ளது." எனப் பேசியுள்ளார்.

ஜன் சுராஜ் செய்தித் தொடர்பாளர் பவன் வர்மா, மாநில கருவூலம் இப்போது தீர்ந்துபோயுள்ளதாகக் கூறியுள்ளார். பீகாரின் பொருளாதாரம் இந்த அளவு பெரிய தொகையை மீட்டெடுக்கும் நிலையில் இல்லை என்றும், இனி நலத்திட்டங்களுக்காக பயன்படுத்த நிதி இல்லை என்றும், கூறியுள்ளார்.
அவர், "எங்களிடம் உள்ள தகவல் தவறாகவும் இருக்கலாம், மாநிலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.10,000, உலக வங்கியிலிருந்து வேறு சில திட்டங்களுக்காக வந்த ரூ.21,000 கோடியிலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது தேர்தலுக்கான ஒழுக்க நெறிகள் செயல்பாட்டுக்கு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, ரூ.14,000 கோடி எடுக்கப்பட்டு, மாநிலத்தில் உள்ள 1.25 கோடி பெண்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது." எனக் குற்றம்சாட்டியுள்ளார்
பீகார் மாநில அரசு தற்போது ரூ.4.06 லட்சம் கடனில் இருப்பதாகவும் தினசரி ரூ.63 கோடி வட்டி சுமை உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் வர்மா















