``ஆண்டுக்கு ரூ.1 கோடி வருமானம்'' - விவசாயத்தில் சாதித்த லக்னோ இளம் பெண்; எப்படி ...
ராஜஸ்தான்: ``திருமணம் நடைபெற 16 நாள் குழந்தையை பலியிட்ட 4 பெண்கள்'' - பெற்றோர்கள் அதிர்ச்சி
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் பூனம்ராம். இவரது மனைவி சுமன். சுமனுக்கு அங்குள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்திருந்தது.
ஆனால், பூனத்தின் சகோதரிகள் ரமேஷ்வரி, மம்தா, கீதா, மஞ்சு ஆகியோர் சேர்ந்து 16 நாட்களேயான குழந்தையை காலால் மிதித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் அக்குழந்தையின் உடலை ஒரு பெண் தனது மடியில் வைத்திருக்க, மற்ற மூன்று பெண்கள் சுற்றி அமர்ந்து ஏதோ மந்திரம் உச்சரித்தனர். அதோடு குழந்தையின் உடலில் மஞ்சள் பொடியை தூவினர். இக்காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.
16 நாட்களேயான குழந்தையை பலியிட்டால் தங்களுக்கு திருமணம் நடைபெறும் என்ற நம்பிக்கையில் இக்காரியத்தை செய்ததாக, குழந்தையின் தந்தை பூனம்ராம் குற்றம் சாட்டியுள்ளார்.
பூனம்ராம் மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றிருந்த நேரத்தில், நான்கு பெண்களும் வந்து இக்கொடிய காரியத்தை செய்துள்ளனர். இது குறித்து குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து நான்கு பெண்களையும் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பூனம்ராம் கூறுகையில், "நான்கு பெண்களுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர்கள் வீட்டில் மொத்தம் ஏழு பெண்கள். இதில் இருவருக்குமே மட்டுமே திருமணம் நடந்திருக்கிறது. அதிலும், ஒரு பெண் திருமணமாகி கணவருடன் சண்டையிட்டுக்கொண்டு பெற்றோர் வீட்டில் வசிக்கிறார்.
எனது மனைவி மட்டுமே கணவன் வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். இதனால் மற்ற திருமணம் ஆகாத பெண்கள் எங்களிடம் பொறாமை கொண்டு இக்காரியத்தை செய்துள்ளனர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்" என்றார்.
குழந்தையின் தாத்தா ராஜுராமும், தங்களது பேரனை பொறாமையால் கொலை செய்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.



















