செய்திகள் :

``ஜடேஜாதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வர விரும்பினார்'' - RR உரிமையாளர் மனேஜ் படேல் பேட்டி

post image

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து டிரேடிங் முறையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனை வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதற்குப் பதிலாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, சாம் கரணை கொடுத்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.

சிஎஸ்கேவின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அணி வீரார்களிடம் கலந்தாலோசனை நடத்தியே இந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் கூறியிருக்கிறது.

ஜடேஜா
ஜடேஜா

இது சிஎஸ்கே ரசிகர்களிடயே வருத்ததை ஏற்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 12 ஆண்டுகள் விளையாடிய ஜடேஜாவிற்கு பிரியாவிடை கொடுப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஐபிஎல் ஆரம்ப காலத்தில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஜடேஜா, “இது என் சொந்த வீட்டுக்குத் திரும்புவது மாதிரி தான். ராஜஸ்தான் ராயல்ஸ் எனக்கு முதல் வெற்றியைத் தந்த அணி. இப்போது மீண்டும் அந்த அணியில் சேர்வதில் மிகுந்த மகிழ்ச்சி!” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் தலைமை உரிமையாளர் மனோஜ் படேல், "4 வாரங்களுக்கு முன்பு அக்டோபர் மாதத்தில் ஜடேஜா என்னைத் தொடர்புகொண்டார். அவர் மீண்டும் தனது தாய் வீடான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் திரும்ப வருவது குறித்து யோசித்து வருவதாகக் கூறினார்.

மனோஜ் படேல்
மனோஜ் படேல்

அதன்பிறகுதான் அனைத்துமே நடந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில்தான் அவர் தனது IPL வாழ்க்கையைத் தொடங்கினார். கடைசியாக 21 வயது இளம் வீரராக ஜடேஜாவைப் பார்த்தேன், தற்போது மீண்டும் அனுபவம் மிக்க இளம் வீரராக அவரை பார்ப்பதில் மகிழ்ச்சி" என்று கூறியிருக்கிறார்.

ரஸல், பதிரனா, மேக்ஸ்வெல்; ஐபிஎல் அணிகள் விடுவித்த வீரர்கள் - முழு விவரம்

CSK Released PlayersCSK Released Players for IPL 2026RR Released Players for IPL 2026KKR Released Players for IPL 2026MI Released Players for IPL 2026GT Released Players for IPL 2026SRH Released Playe... மேலும் பார்க்க

``நான் பேட்டிங் செய்தாலே அம்மா ஹாப்பி ஆகிடுவாங்க; ஆனால் அப்பா" - மனம் திறக்கும் சூர்யவன்ஷி

இந்திய அணிக்குள் என்னை எப்போது சேர்க்கப்போகிறீர்கள் என்கிற வகையில் நாளுக்கு நாள் தனது அதிரடி ஆட்டத்தை கூட்டிக்கொண்டே சென்று கொண்டிருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி.13 வயதில் 19 வயத்துக்குட்பட்டோர் இளையோர் ட... மேலும் பார்க்க

IPL: CSK `டு' RCB; வீரர்கள் பட்டியலை வெளியிட்ட அணிகள்; மீத இருப்புத்தொகை எவ்வளவு | முழு பட்டியல்

2026 ஐ.பி.எல் சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ம் தேதி நடைபெறவிருக்கிறது.அதற்கு முன் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும், விடுவிக்கும் மற்றும் ட்ரேட் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்ப்பதற்கான இறு... மேலும் பார்க்க

"அந்த குடும்பத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது"- RR குறித்து மனம் திறந்த சஞ்சு

ஐ.பி.எல் மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், அணிகள் தங்களின் டிரேடிங் அப்டேட்ஸை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றன.அதன்படி, சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்கியிருப்பது உறுதியாகியிருக்கிற... மேலும் பார்க்க

"ஜட்டுவை கொடுத்தது, ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாகத்தான் இருக்கும்; ஆனால்!"- CSK காசி விஸ்வநாதன்

ஐ.பி.எல் மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், அணிகள் தங்களின் டிரேடிங் அப்டேட்ஸை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். அதன்படி, சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணி வாங்கியிருப்பது உறுதியாகியிருக்... மேலும் பார்க்க

``ஒரு தவறும் செய்யவில்லை; அடி மேல் அடி, நொறுங்கிப் போனேன்" - மத தாக்குதல் பற்றி ஜெமிமா ஓபன்!

ஜெமிமா ரோட்ரிக்ஸ்... இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இனி மறக்க முடியாத பெயர்.நடந்து முடிந்த மகளிர் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி முதல்முறையாகச் சாம்பியன் பட்டத்தை வென்று அரைநூற்றாண்டுக்... மேலும் பார்க்க