செய்திகள் :

Doctor Vikatan: தலைவலியே இல்லாவிட்டாலும் தினமும் தைலம் தடவும் வழக்கம், பிரச்னை வருமா?

post image

Doctor Vikatan: என் வயது 53. எனக்கு தினமும் தலைவலி தைலம் தடவிக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. வலி இருக்கிறதோ, இல்லையோ, அதைத் தடவிக்கொண்டு தூங்கினால்தான் திருப்தியாக உணர்வேன். இந்தப் பழக்கத்தினால் ஏதேனும் பிரச்னைகள் வருமா... தைலம் என்ன செய்யும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

 மனநல மருத்துவர் சுபா சார்லஸ்
மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

பொதுவாக இந்தத் தைலங்கள் நல்ல மணம் கொண்டவை, அந்த மணமானது இதமான உணர்வைத் தரும். ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்னைகளைப் போக்கும், வலிகளைப் போக்கும், நெற்றிப் பகுதியில் தடவுவதன் மூலம் மூக்கின் வழியே உள்ளே போய், நெஞ்சு சளியைப் போக்கும் என்றெல்லாம் காலம் காலமாக நம்பப்படுகிறது. 

தைலங்களின் மணம் ஏற்படுத்தும் உணர்வை உளவியலில் 'கண்டிஷனிங்' (conditioning) என்று குறிப்பிடுவோம். பல வீடுகளிலும் பெண்கள் இப்படி தைலத்தைத் தடவிக் கொண்டதும், வீட்டிலுள்ள மற்ற உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணுக்கு உடல்நலம் சரியில்லை, ஓய்வெடுக்க நினைக்கிறார் என புரிந்துகொண்டு தொந்தரவு செய்யாமல் இருப்பார்கள்.

வீட்டு வேலை, வெளி வேலைகளைப் பார்த்துக் களைத்துப் போன பெண்களுக்கும், இப்படி ஒரு தைலத்தைத் தடவிக் கொண்டதும் ' வேலை செய்தது போதும்...ஓய்வெடு' என உளவியல்ரீதியான ஓர் உணர்வு ஏற்படுகிறது.

அந்தத் தருணங்களில் அவர்களுக்கு தலைவலியோ, ஜலதோஷமோ இருக்க வேண்டும் என்றில்லை. தைலத்தைத் தடவிக்கொண்டு படுத்ததுமே அவர்களுக்கு உடல் ரிலாக்ஸ் ஆகி, தலைவலி போவதாக உணர்கிறார்கள். 

தலைவலி தைலம்
தலைவலி தைலம்

பெரும்பாலான பெண்களுக்கும் ஸ்ட்ரெஸ் மற்றும் டென்ஷன் ஏற்படுத்தும் தலைவலிகளே பிரதானமானவை. அதை கவனிக்காமல் விடும்போதுதான் வலி அதிகமாகி, அடுத்தகட்டத்துக்குப் போகிறது. லேசான டென்ஷனாக உணரும்போதே இப்படி தைலத்தைத் தடவிக்கொள்வதால் டென்ஷன் விடுபடுவதாக உணர்கிறார்கள்.

இந்தப் பழக்கத்தால் பெரிய அளவில் பக்கவிளைவுகள் ஏற்படாது. சென்சிட்டிவ்வான சருமம் கொண்டவர்களுக்கு இந்தத் தைலங்களும் களிம்புகளும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே, மெள்ள இதிலிருந்து விடுபட முயற்சி செய்யுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Doctor Vikatan: வயதுக்கேற்ற உயரம் இல்லாத டீன் ஏஜ் மகள்; 15-16 வயது பிறகு வளர்ச்சி நின்றுவிடுமா?

Doctor Vikatan: டீன் ஏஜில் இருக்கும் என் மகளுக்கு அந்த வயதுக்கேற்ற உயரம் இல்லை. 15-16 வயதுக்குப் பிறகு வளர்ச்சி நின்றுவிடும் என்கிறார்கள் சிலர். அது உண்மையா... வயதுக்கேற்ற உயரத்தைப் பெற ஏதேனும் வழிகள்... மேலும் பார்க்க

உங்க சாப்பாட்ல மசாலா பொருள்கள் இருக்கா? - மருத்துவர் கு. சிவராமன்

தினசரி உணவில், நாம் எத்தனைவிதமான நறுமணப் பொருட்களை, மசாலாப் பொருட்களைச் சேர்க்கிறோம் தெரியுமா? வாரா வாரம் சாம்பார் பொடி, ரசப் பொடி, புளிக்குழம்பு பொடி எனத் திரித்துவைக்கும் அம்மாக்கள் இன்றைக்கும் சிலர... மேலும் பார்க்க

Doctor Vikatan: தாம்பத்திய உறவு, நீண்ட நேரம் ஈடுபடுவது பிரச்னையின் அறிகுறியா?

Doctor Vikatan: 34 வயது நண்பனின் சார்பாக இந்தக் கேள்வியை எழுப்புகிறேன். அவனுக்கு சமீபத்தில்தான் திருமணமானது. வழக்கமாக பெரும்பாலான ஆண்களுக்கும், நீண்ட நேரம் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியவில்லை என்பதுதா... மேலும் பார்க்க

Doctor Vikatan: கையேந்தி பவன் முதல் பெரிய ரெஸ்டாரன்ட் வரை, போலி பனீரை எப்படி அடையாளம் காண்பது?

Doctor Vikatan: என்குழந்தைகள் இருவருக்கும் பனீர் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், சமீபகாலமாக பல கடைகளிலும் போலி பனீர் விற்கப்படுவதாகச் செய்திகள் வருகின்றன. போலி பனீரை எப்படித் தயாரிக்கிறார்கள்... அத... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஃபேஷனுக்காக சைடு காது குத்திக்கொண்டால் இன்ஃபெக்‌ஷன் வருமா? தவிர்க்க என்ன வழி?

Doctor Vikatan: என்மகளுக்கு 14வயதாகிறது. ஏற்கெனவே காது குத்தியிருக்கிறோம். இப்போது ஃபேஷனுக்காக காதின் பக்கவாட்டில், இன்னும் இரண்டு துளைகள் போட வேண்டும் என அடம் பிடிக்கிறாள். அப்படிக் குத்தினால் ஏதேனும... மேலும் பார்க்க

எந்த பாலை காய்ச்சணும்; எந்த பாலை சுட வைக்கணும்? உணவியல் நிபுணர் அட்வைஸ்!

காலையில் எழுந்ததும் ஒரு கப் டீயோ, காபியோ குடித்தால்தான் சுறுசுறுப்பு நாடி நரம்பெல்லாம் பரவும் என்ற மனப்பழக்கத்துக்கு ஆளாகி இருப்பவர்கள் நாம். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்குமான முக்கியமான ஊட்டச்சத்த... மேலும் பார்க்க