`10 நிமிடம் தாமதம்' - ஆசிரியர் கொடுத்த `100 முறை சிட்-அப்' தண்டனையால் உயிரிழந்த ...
Serial update: ரெண்டாவது பாப்பா, மகிழ்ச்சியில் பரதா; தூர்தர்ஷன் டு பிக்பாஸ் சபரி கடந்து வந்த பாதை
ரெண்டாவது பாப்பா.. மகிழ்ச்சியில் பரதா!
சீரியல் நடிகை பரதா இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கப்போகிறார். ஏற்கனவே மகள் இருக்கும் சூழலில் இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் அவருக்கு நண்பர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
'செம்பருத்தி' முதலான பல சீரியல்களில் நடித்தவர் பரதா. இவருக்கும் சீரியல்களில் கேமராவுக்குப் பின்புறம் வேலை பார்த்துக்கொண்டிருந்த பரத் என்பவருக்கும் காதல் மலர்ந்து 2020ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
சில ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில மாதங்கள் பிரேக் எடுத்தவர் மீண்டும் நடிக்க வந்து விட்டார். இப்போது 'அன்னம்' தொடரில் நடித்து வருகிறார்.
இந்தச் சூழலில் தற்போது பரதா மீண்டும் தாய்மை அடைந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி, நெருங்கிய சொந்தங்கள் சூழ நடந்து முடிந்திருக்கிறது.
இது எட்டாவது மாதம் என்பதால் டெலிவரிக்கு நெருக்கத்தில் பிரேக் எடுத்துக் கொள்ளலாமென தொடர்ந்து ஷூட்டிங் போய் வருகிறார். 'அன்னம்' தொடரின் ஷூட்டிங் கோபி செட்டிபாளையத்தில் நடந்து வருகிறது.
அவனுக்கு இது சரிப்பட்டு வருமா?
இருபது போட்டியாளர்களுடன் அக்டோபர் முதல் வாரத்தில் பிக்பாஸ் சீசன் 9 தொடங்கியது நினைவிருக்கலாம். பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிரஜின், சான்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் இணைந்தனர்.
இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் வெளியேற, அப்சரா, பிரவீன் காந்த், ஆதிரை, துஷார், பிரவீன், ஆகியோர் அடுத்தடுத்த எவிக்ஷனில் வெளியேறினர்.

இதுவரை ஏழு பேர் வெளியாகி உள்ள நிலையில் இந்த வார எவிக்ஷனுக்கான ஷூட் இன்று நடந்த நிலையில் அதில் வாட்டர்மெலன் திவாகர் வெளியேறி இருப்பதாகத் தெரியவருகிறது.
இந்தச் சூழலில் இதுவரையிலான நாட்களில் போட்டியாளர்களின் பெர்ஃபார்மன்ஸை வைத்து கடைசி வரை வருவார்கள் என்கிற நம்பிக்கையை பார்வதி, கமருதீன் உள்ளிட்ட சிலர் தருகின்றனர். திவாகரும் கன்டென்ட் தருபவராகவே ஆரம்பத்தில் பார்க்கப்பட்டார். ஆனால் சமீப சில தினங்களாக அவரது நடவடிக்கைகள் சர்ச்சை உண்டாக்குவது போல தெரியவே அவர் எவிக் அகி விட்டார் என்கிறார்கள்.
தற்போது மிச்சமிருக்கும் போட்டியாளர்கள் அனைவருக்குமே டைட்டில் கனவு இருக்கும் நிலையில், சின்னத்திரை நடிகர் சபரியின் நண்பர்கள் சிலரிடம் பேசினோம்.
''ஆஙக்ரிங் ஆர்வத்துலதான் டிவி பக்கம் வந்தார். ஆரம்பத்துல தூர்தர்ஷன்ல குழந்தைகளுக்கான நிகழ்ச்சி பண்ணினார். அப்படியே படிப்படியா வளர்ந்துதான் பிறகு முன்னணி சேனல்களில் சீரியல் லீட் ரோல் பண்ணற அளவுக்கு வளர்ந்தார். ரொம்ப பந்தா இல்லாதவர். பிறருக்கு உதவுகிற குணம் உண்டு. கான்ட்ரவர்சியில சிக்க விரும்பாதவர். பிக் பாஸ் வாய்ப்பு வந்தபோது அந்த வீடு இவருக்கு எப்படி செட் ஆகும்னுதான் நாங்க எல்லாரும் நினைச்சோம்.

ஏன்னா, இயல்புக்கு எதிராக நடிக்கத் தெரியாத ஆளு. அப்படி இருக்கிறவங்களைத்தான் நம்ம ஆளுங்க அதிகம் ட்ரிகர் பண்ணுவாங்களே! அதனால அங்கபோய் எப்படி கேம் ஆடுவார்னு நினைச்சோம். ஆனா எப்படியோ ஒரு மாதத்தைத் தாண்டிட்டார். இவ்வளவு நாளும் எப்படி தாக்குப் பிடிச்சாரோ, அதே ரூட்ல போனாலே மிச்ச நாளையும் கடந்துடுவார்னு நினைக்கோம். டைட்டில் வாங்குவாரோ இல்லையோ கடைசி வரை அந்த வீட்டுல இருப்பார்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு'' என்கின்றனர் அவர்கள்.



















