செய்திகள் :

’சிங்கக்குட்டியுடன் விளையாடலாம்’; வினோத சேவையால் சர்ச்சையில் சிக்கிய சீன ஹோட்டல்

post image

சீனாவில் உள்ள ஒரு ஹோட்டலில் வாடிக்கையாளர்களைக் கவருவதற்கு ஒரு வினோதமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளனர். தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விருந்தினர்கள் தங்களது அறையில் சிங்கக்குட்டியுடன் விளையாடலாம் என அறிவிக்கப்பட்ட இந்த சேவைக்கு, விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

சீனாவின் ஜிமு நியூஸ் வெளியிட்ட செய்தியின்படி, சீனாவில் உள்ள ஒரு ரிசார்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு 'லயன் கப் வேக்-அப் சர்வீஸ்' (Lion Cub Wake-Up Service) என்ற பெயரில் சேவையை வழங்கி வருகிறது.

இதற்காக ஒரு இரவு தங்குவதற்கு 628 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,804) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

lion cub

இந்த சேவையின் கீழ், தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரை, சுமார் ஏழு நிமிடங்கள் சிங்கக்குட்டி விருந்தினர்களின் அறைக்குக் கொண்டுவரப்படும். இந்த நேரத்தில் அவர்கள் அதனுடன் விளையாடலாம்.

இந்த அனுபவத்தைப் பெற விரும்பும் விருந்தினர்கள் சேவை ஒப்பந்ததில் கையெழுத்திட வேண்டுமாம். அதில் சிங்கக்குட்டி அறைக்குள் இருக்கும்போது, ஹோட்டல் ஊழியர் ஒருவர் தொடர்ந்து கண்காணிப்பார் என்றும், விருந்தினர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் ஹோட்டல் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த வினோத சேவை குறித்த செய்தி பரவியதும், இதற்கு எதிரான விமர்சனங்கள் வலுத்துள்ளன.

சிங்கக்குட்டியை அதன் இருப்பிடத்திலிருந்து பிரித்து, ஒரு அறைக்குள் அனுப்புவது விலங்குகள் காட்சிப்படுத்தல் சட்டத்தின் கீழ் வருமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

சீனாவில் இது போன்று நடப்பது முதல்முறையல்ல. கடந்த ஜூன் மாதம், சோங்கிங் நகரில் உள்ள ஒரு ஹோட்டல் 'ரெட் பாண்டா வேக்-அப் சர்வீஸ்' என்ற சேவையை அறிமுகப்படுத்தியது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவியதும், உள்ளூர் வனத்துறை உடனடியாகத் தலையிட்டு அந்தச் சேவையை நிறுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மும்பை: ₹500 கோடி மருத்துவக் கல்லூரி தனியார்மயம்; அஜித்பவார் உறவினருக்கா? - மாநகராட்சி பதில் என்ன?

மும்பை புறநகர் பகுதியான கோவண்டியில் 580 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவக் கல்லூரியை மாநகராட்சிக்கு சொந்தமான சதாப்தி மருத்துவமனை நிர்வாகம் கட்டியுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி கட்ட ரூ.500 கோடி செலவிட... மேலும் பார்க்க

`இலையை வைத்து இசை' இணையவாசிகளிடம் கவனம் பெற்ற நபர் - வன அதிகாரி பகிர்ந்த வீடியோ வைரல்

விலை உயர்ந்த கருவிகள் இல்லாமல் சிறிய இலையை வைத்து பலரும் மெய்ப்பிக்கும் வகையில், புலிகள் காப்பக வழிகாட்டி ஒருவர் இனிமையான இசையை வாசிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்திய வன அதிகாரி பர... மேலும் பார்க்க

Maithili Thakur: ``நான் பாடிய தமிழ் பாடல் வைரலாகி இருக்கு, அதனால்''- பீகாரின் இளம் MLA நெகிழ்ச்சி

பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்தத் தேர்தலில் பிரபலமான நாட்டுப்புறப்... மேலும் பார்க்க

சி.கே. குமாரவேல் குடும்பத்தின் ‘நெக்ஸ்ட்பேஸ்’- அதிநவீன தோல் பராமரிப்பு பிராண்ட் அறிமுகம்

இந்தியாவின் இளம் தலைமுறை அழகு, அடையாளம் மற்றும் தொழில்நுட்பத்தை ஒன்றிணைத்து புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இருப்பினும், இந்தத் தலைமுறை ஆன்லைனில் அழகு மற்றும் தங்களுக்கான தனிப்பட்ட பராமரி... மேலும் பார்க்க

Happy Hearts: அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் ‘ஹேப்பி ஹார்ட்ஸ்’ அறிமுகம்

அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை (Apollo Children’s Hospital) குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில், அப்போலோ ஷைன் அறக்கட்டளையுடன் (Apollo Shine Foundation) இணைந்து, ’ஹேப்பி ஹார்ட்ஸ்’ (Happy Hearts) என... மேலும் பார்க்க

`என் அம்மா பெருமைப்படுவார்' - ரூ.4000 கோடியில்; 55 மாடி - ஷாருக்கின் பெயரை வைக்கும் நிறுவனம்

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் உலகத்திலேயே மிகப்பெரிய பணக்கார நடிகராக அறியப்படுகிறார். அவரது புகழ் இந்தியா மட்டுமல்லாது வளைகுடா நாடுகளிலும் வெகுவாக பரவியிருக்கிறது. இதனால் ஷாருக் கானின் படங்களுக்கு வெளிந... மேலும் பார்க்க