செய்திகள் :

Vikatan Play: கலை கலைக்கானதா? மக்களுக்கானதா? எழுத்தாளர் இரா.முருகவேள் படைப்புகள் - ஆடியோ வடிவில்

post image

“ தமிழ்ச்சூழலில் தான் கொண்ட பொதுவுடமை அரசியலை தன் களச்செயற்பாட்டில் மட்டுமின்றி படைப்பின் வழியிலும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார் எழுத்தாளர் இரா.முருகவேள்.

அரசியல் செயற்பாட்டாளர், வழக்கறிஞர், மொழிப்பெயர்ப்பாளர் என பல்திறன் ஆளுமையாய் விளங்கும் இவர் தன் ஒவ்வொரு படைப்பிலும் சாதிய, சமூக வர்க்க பேதங்களுக்கு எதிராக குரலெழுப்பி வருகிறார்.

நம் எல்லோருக்குள்ளும் கலை கலைக்கானதா? மக்களுக்கானதா? என்ற கேள்வி எழும். ஆனால் ‘ கலை எப்போதும் மக்களுக்கானது’ என்ற நிலைப்பாட்டில் வழி தன் மக்களுக்கு எதிரான அதிகாரத்தை தொடர்ந்து தன் புனைவின் வழியிலும் இன்றைக்கு சமகாலத்தில் பெரிய சவாலாக இருக்கும் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்தை தொடர்ந்து பேசியும், தன் புனைவு படைப்பின் கதாபாத்திரத்தின் வழியும் பெருங்குரலெடுக்கிறார். இவரின் மொழிபெயர்ப்பு நாவலான பி. எச் . டேனியல் எழுதிய ‘எரியும் பனிக்காடு’ நாவலை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு 38 ஆண்டுகளுக்கு பிறகு மொழிபெயர்த்திருக்கிறார்.

தமிழ் இலக்கியச்சூழலில் முக்கியமான படைப்பான இன்றும் இந்தப்புத்தகம் இருக்கிறது. இதைத்தவிர, தவிர ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம், தூக்கிடுபவரின் குறிப்புகள் போன்ற பல்வேறு புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறார். இவர் எழுதிய புனைபாவை, மிளிர்கல், செம்புலம், முகிலினி போன்ற படைப்புகள் எல்லாம் வரலாற்றோடு சமகால அரசியலையும், சாதிய சமூக சார்ந்த சூழலையும் உண்மைத்தன்மை மாறாமல் பதிவு செய்பவையாகவே இருக்கின்றன.

இரா.முருகவேள் படைப்புகள் விகடன் பிளேயில் ஆடியோ வடிவில்

சமகால இலக்கிய உலகில் தொடர்ந்து அரசியல் படைப்பை கொடுத்து வரும் எழுத்தாளர் இரா.முருகவேளின் படைப்புகளை வாசிப்பதும் கேட்பதும் அவசியமான ஒன்று. ஆகவே, இலக்கியத்திலும் அரசியலிலும் தனித்ததொரு ஆளுமையாய் திகழ்கிறார் இரா.முருகவேள்.

இவரின் படைப்பில் ஆடியோ வடிவில் விகடன் பிளேயில் கிடைக்கின்றன. மறக்காம Click செய்து கேளுங்கள்...

செம்புலம் : https://www.vikatan.com/vikatan-play/sempulam-audio-series

புனைபாவை : https://www.vikatan.com/vikatan-play/punai-paavai-audio-series

மிளிர்கல் : https://www.vikatan.com/vikatan-play/milirkal-audio-series

முகிலினி : https://www.vikatan.com/vikatan-play/mugilini-audio-series

ஜம்மு காஷ்மீர் : கடந்து வந்த பாதை; பிரிவு 370 நீக்கம்... எதிர்காலம்?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நித்தமும் நினைவில் சுமந்து கொண்டே இருந்த நிகழ்வு! - மனதிற்கு அரிய மருந்தான மன்னிப்பு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஜெய்சங்கர் படம் பார்க்க 10 கி.மீ., சைக்கிள் பயணம்! - நள்ளிரவு காட்சி தந்த த்ரில் அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கர்மாவும் நாயின் வாலும்! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அவர்கள் நம்மை விட 30 ஆண்டுகள் முன்னேறி இருக்கிறார்கள்! : ஒரு தமிழனின் வியப்பூட்டும் சீன அனுபவம்!