செய்திகள் :

DD: `எனக்கும், என் குடும்பத்துக்கும் கிங் இவர்தான்' - திவ்யதர்ஷினி நெகிழ்ச்சி

post image

சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா கடந்த அக்டோபர் 12ம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இதில் 2024-ம் ஆண்டின் `சிறந்த தொகுப்பாளர் விருது’ மா.கா.பா ஆனந்த்துக்கு வழங்கப்பட்டது. விருதை, தொகுப்பாளர் திவ்யதர்ஷினி (DD) வழங்க, மா.கா.பா ஆனந்த் பெற்றுக்கொண்டார்.

திவ்யதர்ஷினி (DD), ரிஷி வம்சி

இந்நிகழ்ச்சியில் ரெட் கார்ப்பெட்டில் என்ட்ரி கொடுத்த திவ்யதர்ஷினியிடம் (DD) 'ACE, Queen, King, Jack' என கார்டுகளை வைத்து சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு திவ்யதர்ஷினி அளித்த சுவாரஸ்ய பதில்கள் இவை.

உங்கள் வாழ்க்கையின் 'ACE' முக்கியமான நபர் யார்?

"என் வாழ்க்கையின் 'ACE' முக்கியமான நபர் என் அக்கோவோட பையன் ரிஷி வம்சிதான்"

உங்க வாழ்க்கையின் 'Queen' யார்?

"என்னோட ஆசிரியர்கள்தான் என்னோட 'Queen'. டாஸன், Mrs. பிரபாகர் இப்படி என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு ஆசிரியர்கள் எனக்கு நிறைய உதவி இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் எனக்கு குயின்ஸ்தான்"

சுதர்ஷன், திவ்யதர்ஷினி (DD), பிரியதர்ஷினி (PD)

உங்க வாழ்க்கையில அட்வைஸ் பண்ணும் 'Jack' யார்?

"நான் கொஞ்சம் எப்பவும் சரியாக இருக்கனும்னு நினைக்கிற ஆள். அதனால் எனக்கு பெரும்பாலும் யாரும் அட்வைஸ் பண்ணமாட்டாங்க. அது ஏன்னு எனக்குத் தெரியல. யாராவது அட்வைஸ் பண்ணா நல்ல இருக்கும்னு நிறையமுறை யோசிச்சிருக்கிறேன். ரொம்ப நேரம் தனியாவே உட்கார்ந்து யோசிப்பேன், எனக்கு நானே பேசிக்குவேன். பெரும்பாலும் எனக்கு நானே அட்வைஸ் சொல்லிக்குவேன்"

உங்க வாழ்க்கையின் 'KING' யார்?

"எனக்கும், என்னோட குடும்பத்துக்கும் கிங் என்னோட சகோதரரர் சுதர்ஷன்தான். அவர் பைலட்டாக இருக்கார். அவர் கிளாஸ் எடுத்தால் பல நாடுகளில் இருந்து வருவாங்க. அவர்தான் எங்களோட கிங்" என்று பெருமையோடு சொன்னார் டிடி.

திவ்யதர்ஷினி (DD), பிரியதர்ஷினி (PD) இருவரும் 'Tele Vikatan'னுக்கு அளித்த ஜாலியான நேர்காணலை காண இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

பாண்டியன் ஸ்டோர்ஸ்: "அந்த இரண்டு திறமையும் இருக்க நிரோஷா ஸ்பெஷலான பொண்ணு" - பூர்ணிமா பாக்யராஜ்

சிறந்த சின்னத்திரை கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா கடந்த அக்டோபர் 12ம் தேதி சென்னையில் நடைபெற்றது.இதில், 2024-ம் ஆண்டின் `ஃபேவரைட் மாமியார் மருமகள்’ விருத... மேலும் பார்க்க

BB Tamil 9: "ஒருத்தரை மட்டும் கூட வச்சுக்கிட்டு, டிராவல் பண்ணலாம்னு நினைக்குறாங்க"- FJ

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று ... மேலும் பார்க்க

BB Tamil 9: "பெண்களின் காவலராகவும், ஹீரோவாகவும் தன்னைக் காட்டிக்கிறாரு, ஆனா"- குற்றம்சாட்டிய கனி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று ... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 42: “விஜய்சேதுபதி மாதிரியே நடிப்பேன்"- கலகல திவாகர்; பம்மி நிற்கும் அடாவடி நபர்கள்

திவாகர் வெளியேற்றப்பட்டார். இதற்காக தமிழக மக்கள் அதிகம் சந்தோஷமடைய முடியாது. “பிக் பாஸ்ல நிறைய நாள் என்னால் இருக்க முடியாது செல்லம்... வெளில நிறைய சூட்டிங் இருக்கு. தயாரிப்பாளர்கள் வெயிட்டிங்” என்று இ... மேலும் பார்க்க

BB Tamil 9: "என்னோட லிஸ்ட்லயே நீ இல்ல" - கொளுத்திப் போடும் டாஸ்க்!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று ... மேலும் பார்க்க