செய்திகள் :

டெல்லி குண்டு வெடிப்பு: ``எந்த ஆதாரமும் இல்லை'' - 3 மருத்துவர்களை விடுவித்த NIA

post image

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை (10-ம் தேதி) நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஹரியானாவின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல மருத்துவர்களை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்தது. இந்த விசாரணையில் முக்கிய குற்றவாளியாக டாக்டர் உமர் உன் நபி என்பவர் ஈடுபட்டது தெரியவந்தது.

NIA

இவருடன் டாக்டர் ரெஹான், டாக்டர் முகமது, டாக்டர் முஸ்தகீம், உர வியாபாரி தினேஷ் சிங்லா ஆகியோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மூன்று நாட்கள் தீவிர விசாரணைக்குப் பிறகு, நால்வரையும் தொடர்புபடுத்தும் ஆதாரங்கள், டிஜிட்டல் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

மேலும், உமர் உல் நபியுடன் இவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் உறுதியானது. அதன் அடிப்படையில், மூன்று முஸ்லிம் மருத்துவர்கள் உட்பட 4 பேரும் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் விடுவிக்கப்பட்டதை பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் உறுதி செய்திருக்கின்றனர்.

மதுரை: ``குப்பை மேடாக காட்சியளிக்கும் கிருதுமால் நதி; நோய் பரவும் அபாயம்'' - மக்கள் அச்சம்

மதுரை சப்பாணி கோயில் தெரு, மீனாட்சி தியேட்டர் அருகில் உள்ள கிருதுமால் ஆற்றின் அருகில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆற்றின் குப்பைகளை இருபுறமும் குவித்து வைத்து சென்... மேலும் பார்க்க

கோவை: 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா - எப்படி இருக்கு? | Photo Album

கோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்கா... மேலும் பார்க்க

பள்ளப்பட்டி: புதர் மண்டி, சிதிலமடைந்து காட்சியளிக்கும் ஏரிப் பூங்கா - புனரமைப்பு செய்யப்படுமா?!

சேலம் மாவட்டம், மூன்று‌ ரோடு அருகில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு பள்ளப்பட்டி ஏரிப் பூங்கா தற்போது பழுதடைந்து புனரமைப்பு பணிகளை எதிர்நோக்கி காத்திருக்கிறது.பள்ளப்பட்டி ஏரியை... மேலும் பார்க்க

``தொகுதிக்கு 500 வாக்குகள் காலியானால் என்ன நடக்கும்?'' - SIR குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி

2021 சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் பெற்று அமைச்சரானார் ஐ. பெரியசாமி. திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருக்கிறார்கடந்த ஆகஸ்ட் ... மேலும் பார்க்க

"தூய்மைப் பணியாளர்களுக்கான தேவையை திராவிட மாடல் அரசு படிப்படியாக செய்யும்"- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.சென்னை கலைவாணர் அரங்கத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணிய... மேலும் பார்க்க

வளர்ப்பு நாய் கடித்ததில் ஈரோடு இளைஞர் உயிரிழப்பு - ரேபிஸ் பரவ காரணம் என்ன?

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே உள்ள கனகபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் ரமேஷ். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ரமேஷை கடந்த 10 நாள்களுக்கு முன் அவர் வீட்டில் வளர... மேலும் பார்க்க