Veeraswamy: லண்டனில் 100 ஆண்டுகளாக இயங்கும் வீராசாமி உணவகம் - அகற்றக்கோரும் நிறு...
Marburg Virus: எத்தியோப்பியாவில் பரவும் மார்பர்க் வைரஸ்; உலக சுகாதார அமைப்பு விளக்கம்
தெற்கு எத்தியோப்பியாவில் 'மார்பர்க்' என்ற கொடிய வைரஸ் பரவி வருவதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எபோலா வைரஸின் குடும்பத்தைச் சேர்ந்த இந்த வைரஸ் கொடியது என்பதால், இது ஒரு புதிய பெருந்தொற்றுக்கு வழிவகுக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுவரை 9 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த எத்தியோப்பிய அரசுடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இது மனிதர்களுக்கு 'மார்பர்க் வைரஸ் நோயை' ஏற்படுத்துகிறது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தக்கசிவு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

நோய்த்தொற்று அறிகுறிகள்
மார்பர்க் வைரஸ் தொற்று ஏற்பட்ட 2 முதல் 21 நாட்களுக்குள் அறிகுறிகள் திடீரெனத் தோன்றும் என நோய் கட்டுப்பாட்டு மையம்தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில் மலேரியா அல்லது டெங்கு காய்ச்சலைப் போன்ற அறிகுறிகள் இருப்பதால், அதைக் கண்டறிவது கடினம் என்கின்றனர்.
முக்கிய அறிகுறிகள்
திடீரென தொடங்கும் அதிக காய்ச்சல்
தாங்க முடியாத தலைவலி மற்றும் தசை வலி
மூன்றாவது நாளில் தொடங்கும் கடுமையான வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாந்தி
ஈறுகள், மூக்கு மற்றும் கண்களில் இருந்து ரத்தக்கசிவு
உடலில் அரிப்பு இல்லாத தடிப்புகள் தோன்றுதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகக் கூறப்பட்டுள்ளது.
Marburg is a highly infectious & often fatal disease in humans.
— WHO Ethiopia (@WHOEthiopia) November 15, 2025
Here's how to protect yourself from the virus:
▶️Avoid close physical contact with #MVD patients
▶️Wear gloves & PPEs when caring for an #MVD patient or suspected case
▶️Follow guidance on safe & dignified burials pic.twitter.com/kpL88hJDdx
பாதிக்கப்பட்ட நபரின் இரத்தம், உமிழ்நீர், சிறுநீர், மலம் மற்றும் விந்து போன்ற உடல் திரவங்களுடன் நேரடித் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதாகவும், பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய படுக்கை, உடைகள் போன்ற பொருட்களைத் தொடுவதாலும் இது பரவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காற்று மூலம் பரவாது என்றாலும், நேரடித் தொடர்பு மூலம் எளிதில் தொற்றும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்பர்க் வைரஸ் பரவல் அரிதானது என்றாலும், அதன் இறப்பு விகிதம் 50% வரை இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.















