"தமிழகத்தில் மதுவை விட கஞ்சா, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது" - சொல்கிறார...
பிரேமலதாவுடன் ஆர்.பி.உதயகுமார் சந்திப்பு; கூட்டணி குறித்துப் பேசப்பட்டதா?
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிமுக கூட்டணியில் தேமுதிக-வை இணைப்பதற்காக இந்த சந்திப்பு நடந்ததாகச் சொல்லப்படும் நிலையில், அதுகுறித்து சமாளிக்கும் விதமாக ஆர்.பி.உதயகுமார் பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரவுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் பிரதான கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. திமுக கூட்டணி பலமாக உள்ள நிலையில், பாஜக-அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சிகள் இணையாமல் உள்ளது. தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி வருவதால் தற்போது அதிமுக மற்ற கட்சிகளை அணுகி வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை வந்துள்ள நிலையில், தேமுதிக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வருகை தந்தார். அங்கிருந்த விஜயகாந்த்தின் படத்திற்கு பிரேமலதாவுடன் சேர்ந்து ஆர்.பி உதயகுமார் மலர் தூவி மரியாதை செலுத்தி வணங்கினார். பிறகு இருவரும் தனியாக பேசிக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், "பிரேமலதா குடும்பத்தில் ஏற்பட்ட துக்க நிகழ்வு தொடர்பாக விசாரித்து ஆறுதல் கூறினேன், கூட்டணி தொடர்பாக நான் எதையும் சொல்ல முடியாது, அதனை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் அறிவிப்பார், அரசியல் தொடர்பாக இந்த சந்திப்பில் பேசவில்லை, நான் மனிதாபிமான அடிப்படையில் அவரை சந்தித்து நலம் விசாரித்தேன்" என்று விளக்கம் அளித்தார்















