செய்திகள் :

"தமிழகத்தில் மதுவை விட கஞ்சா, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது" - சொல்கிறார் வைகோ

post image

சமத்துவ நடைபயணத்தில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களை நேர்காணல் செய்வதற்காக மதுரை வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் 7,000 கிலோ மீட்டர் தூரம் நடந்துள்ளேன். தமிழகத்தில் மதுவை விட கஞ்சா, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளி மாணவர்கள் போதைப்பொருளை பயன்படுத்துகிறார்கள். போதைப்பொருளை பயன்படுத்துவதால் இளம்பெண்கள் மீது பாலியல் தாக்குதல் செய்கிறார்கள்.

நடை பயணத்துக்கு நேர்காணல்

சில இடங்களில் பெண்களும் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள் என்பது அதிர்ச்சி தகவலாக உள்ளது.

அரிவாள், பட்டா கத்தியுடன் மாணவர்கள் கல்லூரிக்கு செல்கிறார்கள். இவற்றிலிருந்து மாணவர்களை இளைஞர்களை மீட்க, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த சமத்துவ நடைபயணத்தை மேற்கொள்கிறேன்.

மது, புகை பழக்கமுள்ளவர்களை தொண்டரணியில் சேர்க்க மாட்டேன். தப்பித்தவறி மதுவோ புகையோ எனது நடைபயணத்தில் உடன் வரும் இளைஞர்கள் பிடித்தால் அவர்களை அப்படியே அனுப்பி விடுவேன்.

வைகோ

எங்களுடைய நடை பயணங்களில் ஒருபோதும் கூட்ட நெரிசலால் எந்த அசம்பாவிதமும் நடந்தது இல்லை. டிராபிக் போலீஸ் செய்வதை விட எங்கள் கட்சியில் உள்ள பாதுகாப்பு பிரிவினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி எங்கள் நடைபயணத்தை மேற்கொள்ள பணியாற்றுவார்கள். பொதுமக்கள் எங்கள் பயணங்களை பார்த்து எவ்வளவு கட்டுப்பாடாக செல்கின்றனர் என ஆச்சரியப்படுவார்கள். தமிழ்நாட்டின் பொது வாழ்வும், அரசியலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறேன்" என்றார்.

SIR: `தவெக எதிர்க்கிறதே தவிர, திமுகவைப் போல் தோல்வி பயத்தில் வேண்டாமெனவில்லை!' - ஜி.கே.வாசன்

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து, ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பிற்குப் பிறகு தமிழ் மா... மேலும் பார்க்க

"மெக்கா புனிதப் பயணம் சென்ற 42 பேர் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்" - தவெக விஜய்

இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படும் மக்காவுக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உம்ரா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்... மேலும் பார்க்க

'இந்த கண்ணீருக்கு பதில் இருக்கா முதல்வரே!' - காலவரையற்ற உண்ணாவிரதமிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்!

தூய்மைப் பணியாளர் ஜெனோவானின் கையில் இரத்த அழுத்ததை அளப்பதற்கான பட்டையை மாட்டுகிறார் மருத்துவர். அவருக்கு ஜெனோவா கொஞ்சம் பதட்டமாக இருப்பதைப் போல தோன்றுகிறது. 'டென்ஷன் ஆகாதீங்கம்மா. ஒன்னும் இல்லை..' என்... மேலும் பார்க்க

பிரேமலதாவுடன் ஆர்.பி.உதயகுமார் சந்திப்பு; கூட்டணி குறித்துப் பேசப்பட்டதா?

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.ஆர்.பி.உதயகுமார்-பி... மேலும் பார்க்க

`ரூ.250 கோடி சொத்து; அரண்மனை வீடு; மதுபான ஆலை பணம்' - வைகோ குறித்து மல்லை சத்யா `பகீர்'

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான வைகோவுக்கும், மதிமுக-வின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் உ... மேலும் பார்க்க