ரஜினிகாந்த்: நடிப்பு கற்றுக்கொடுத்த ஆசிரியர் மறைவு; நேரில் சென்ற சூப்பர் ஸ்டார் ...
"மெக்கா புனிதப் பயணம் சென்ற 42 பேர் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்" - தவெக விஜய்
இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படும் மக்காவுக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உம்ரா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இன்று காலை டீசல் டேங்கர் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அந்தப் பேருந்தில் பயணித்த 42 புனித யாத்திரை மேற்கொண்ட பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், உயிரிழந்தவர்கள் இந்தியர்கள் என்றும், தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்திலிருந்து புனித பயணம் மேற்கொண்டவர்கள் எனவும் முதற்கட்ட தகவல் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சவூதி: மெக்கா டு மெதினா; டீசல் டேங்கருடன் மோதிய பஸ்; 42 இந்தியர்கள் பலி - உயிர் பிழைத்த ஒருவர்
உயிரிழந்த அனைவரும் இந்தியாவில் இருந்து சென்றவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து சென்றவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
தெலங்கானா அரசு சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு தெலங்கானாவில் இருந்து சென்றவர்கள் குறித்து கேட்டு விசாரித்து வருகிறது. மேலும் இறந்தவர்கள் உடலை இந்தியாவிற்கு கொண்டுவர தேவையான உதவிகளை செய்யும்படியும் கேட்டுக்கொண்டது.
தெலுங்கானா மாநிலத்திலிருந்து சவுதி அரேபியாவின் மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட 42 பேர், மதீனா அருகே நிகழ்ந்த விபத்தில் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
— TVK Vijay (@TVKVijayHQ) November 17, 2025
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் ஆன்மா…
இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் வருத்தங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அவ்வகையில் தவெக தலைவர் விஜய், "தெலுங்கானா மாநிலத்திலிருந்து சவுதி அரேபியாவின் மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட 42 பேர், மதீனா அருகே நிகழ்ந்த விபத்தில் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்." என்று தனது வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார்.














