செய்திகள் :

"ஆணவம் வேண்டாம் உதயநிதி; நீங்களே வாரிசை வைத்து வந்தவர்" - தமிழிசை செளந்தரராஜன் காட்டம்!

post image

திமுக தொடங்கப்பட்டு 75 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அக்கட்சியின் இளைஞர் அணி சார்பில் 'தி.மு.க 75 அறிவுத்திருவிழா' என்னும் நிகழ்ச்சி நவம்பர் 8-ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 16- ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்நிலையில் நேற்றைய முற்போக்குப் புத்தகக் காட்சி நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "நாம் அறிவுத்திருவிழா நடத்தியதே 4 நாட்களுக்குப் பின்னால் தான் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

'அறிவுத் திருவிழா ஏன் நடத்துகிறீர்கள்' என்று கேட்கிறார்கள்.

அறிவிருப்பவன் அதற்கு அறிவுத் திருவிழா நடத்துகிறான். அறிவுத் திருவிழாவில் அவர்களை விமர்சித்துப் பேசுகிறோம் என அவர்களுக்குக் கோபம் வேறு. சுகாதாரம் பற்றி பேசுகையில் கிருமிகளைப் பற்றி எப்படி பேசாமல் இருக்க முடியும்.

எப்படி போலீஸ பார்த்த திருடனுக்குப் பயம் வருமோ, அப்படி அறிவுங்கிற வார்த்தைய கேட்டாலே அவங்களுக்கு அலர்ஜி வருகிறது" என்று பேசியிருந்தார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

மேலும், "நாட்டில் எதிர்க்கட்சிகளை முடக்க இன்றைக்கு தேர்தல் ஆணையமே SIR வேலையில் ஈடுபட்டிருக்கிறது. தேர்தலையே திருட்டுத்தனமாக நடத்துவதற்கு முனைந்திருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. இதனை நாம் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும்" என்று பேசியிருக்கிறார் உதயநிதி.

இந்நிலையில் உதயநிதியின் பேச்சை விமர்சித்திருக்கும் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை செளந்தர ராஜன், "அறிவாளிகள்தான் அறிவுத் திருவிழா நடத்துவாங்க. அறிவில்லாதவர்கள் இதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்' என உதயநிதி பேசியிருக்கிறார்.

உதயநிதி அவர்களே நீங்கள் அறிவை வைத்துதான் துணை முதல்வர் ஆனீர்களா?

வாரிசு அடிப்படையில் துணை முதல்வர் பதவியைப் பெற்றவர் நீங்கள். ஆணவம் வேண்டாம் உதயநிதி, ஆணவம் வேண்டாம்.

'திருடனுக்குத்தான் போலீஸ்காரர்களைப் பார்த்து பயம்' என்கிறார் உதயநிதி. அப்போ நீங்கள் ஓட்டைத் திருடுவதால் S.I.R பார்த்து பயபடுகிறீர்களா?

'பிற மாநிலங்களில S.I.R எங்கெல்லாம் பண்ணிருக்காங்களோ அங்கெல்லாம் எதிர்க்கட்சி ஜெயித்த இடத்தில் பாஜக ஜெயித்திருப்பதாக' உதயநிதி கூறுகிறார்.

தமிழிசை சௌந்தராராஜன்
தமிழிசை சௌந்தராராஜன்

அப்போ அங்கெல்லாம் போலி வாங்காளர்களை வைத்து ஜெயித்தவர்கள், S.I.Rக்குப் பிறகு உண்மையான வாக்குகளைப் பெற்று அவர்களது கூட்டணியான காங்கிரஸால் ஜெயிக்க முடியவில்லை. S.I.Rக்குப் பிறகு தமிழ்நாட்டிலும் திமுக காங்கிரஸ் கூட்டணியால் ஜெயிக்க முடியாது" என்று பேசியிருக்கிறார் தமிழிசை செளந்தரராஜன்.

டெல்லி குண்டு வெடிப்பு: ``எந்த ஆதாரமும் இல்லை'' - 3 மருத்துவர்களை விடுவித்த NIA

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை (10-ம் தேதி) நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தொடர்பு... மேலும் பார்க்க

மதுரை: ``குப்பை மேடாக காட்சியளிக்கும் கிருதுமால் நதி; நோய் பரவும் அபாயம்'' - மக்கள் அச்சம்

மதுரை சப்பாணி கோயில் தெரு, மீனாட்சி தியேட்டர் அருகில் உள்ள கிருதுமால் ஆற்றின் அருகில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆற்றின் குப்பைகளை இருபுறமும் குவித்து வைத்து சென்... மேலும் பார்க்க

கோவை: 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா - எப்படி இருக்கு? | Photo Album

கோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்கா... மேலும் பார்க்க

பள்ளப்பட்டி: புதர் மண்டி, சிதிலமடைந்து காட்சியளிக்கும் ஏரிப் பூங்கா - புனரமைப்பு செய்யப்படுமா?!

சேலம் மாவட்டம், மூன்று‌ ரோடு அருகில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு பள்ளப்பட்டி ஏரிப் பூங்கா தற்போது பழுதடைந்து புனரமைப்பு பணிகளை எதிர்நோக்கி காத்திருக்கிறது.பள்ளப்பட்டி ஏரியை... மேலும் பார்க்க

``தொகுதிக்கு 500 வாக்குகள் காலியானால் என்ன நடக்கும்?'' - SIR குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி

2021 சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் பெற்று அமைச்சரானார் ஐ. பெரியசாமி. திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருக்கிறார்கடந்த ஆகஸ்ட் ... மேலும் பார்க்க

"தூய்மைப் பணியாளர்களுக்கான தேவையை திராவிட மாடல் அரசு படிப்படியாக செய்யும்"- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.சென்னை கலைவாணர் அரங்கத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணிய... மேலும் பார்க்க