BB Tamil 9: நாமினேஷன் லிஸ்டில் 13 பேர்! இந்த வாரம் வெளியேறிய பெண் போட்டியாளர்?
பள்ளிவாசலுக்கு மந்திரிக்க சென்ற இளம்பெண்ணை பாலியல் கொடுமை செய்ய முயன்ற நபர்; நரிக்குடியில் பரபரப்பு!
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே வீரசோழன் பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். இவர் நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் அஷ்ரத் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நரிக்குடி பகுதியை சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் அப்துல் அஜீஸிடம் மந்திரிக்க சென்றுள்ளார். அப்போது அந்த இளம் பெண்ணை அப்துல் அஜீஸ் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். அப்போது அப்துல் அஜீஸ் தான் வைத்திருந்த சிறிய கத்தியை வைத்து அந்த பெண்ணை கழுத்து கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.

அந்த இளம் பெண் வலி தாங்க முடியாமல் பள்ளிவாசலில் இருந்து வெளியே வந்து கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அப்துல் அஜீஸை பிடித்து நரிக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த அந்த இளம் பெண் திருச்சுழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரிக்குடி காவல் நிலைய போலீசார் அப்துல் அஜீஸை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நரிக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.















