செய்திகள் :

ஊட்டி: காட்டு மாடுகளைச் சுட்டு கொல்லும் கேரள வேட்டைக்கும்பல்; வேடிக்கை பார்க்கிறதா வனத்துறை?

post image

கேரளா, கர்நாடகா மாநிலங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் முச்சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கிறது நீலகிரி மாவட்டம். வனங்கள் அடர்ந்த நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளைப் போல ஊடுருவும் வேட்டைக் கும்பல்கள் வனவிலங்குகளை வேட்டையாடி இறைச்சியைக் கடத்திச் செல்கின்றனர்.

அதிலும் குறிப்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த வேட்டைக் கும்பல்களின் வேட்டைக்களமாக நீலகிரி காடுகள் மாறி வருகிறது.

கடமான், காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் மட்டுமின்றி தோடர் பழங்குடிகளின் வளர்ப்பு எருமைகளையும் கேரள கும்பல்கள் வேட்டையாடிச் செல்கின்றன.

கைதான ரெஜி
கைதான ரெஜி

தமிழ்நாடு வனத்துறை மற்றும் காவல்துறையின் அலட்சியம் காரணமாகவே கேரள வேட்டைக் கும்பல்களின் ஊடுருவல் அதிகரித்து வருவதாகவும் நடவடிக்கை என்கிற பெயரில் வேடிக்கை பார்ப்பதாகவும் வனவிலங்கு பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சில்ஹல்லா வனப்பகுதியில் காட்டு மாட்டைச் சுட்டு வீழ்த்திய கேரள வேட்டைக் கும்பலினர் வனத்துறையினரிடம் இருந்து தப்பித்து ஓடியுள்ளனர். பிடிபட்ட ஒருவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், "வன பணியாளர்கள் இரவு ரோந்தின்போது சந்தேகப்படும் படியான நபர்களின் நடமாட்டம் இருப்பதை அறிந்து நெருங்கும் வேளையில் தப்பி ஓடிவிட்டனர். நாங்கள் துரத்திச் சென்றதில் கேரள மாநிலம் வழிக்கடவு பகுதியைச் சேர்ந்த ரெஜி என்கிற ஒருவனைப் பிடித்தோம்.

கைதான ரெஜி
கைதான ரெஜி

காட்டு மாட்டை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை ஒப்புக் கொண்டான். இறந்து கிடந்த காட்டு மாட்டின் உடலில் பாய்ந்திருந்த இரண்டு தோட்டாக்களைக் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறோம். தப்பிய ஓடிய அவனின் கூட்டாளிகளைத் தேடி வருகிறோம். வனவிலங்கு வேட்டையைத் தடுக்க இரவு பகலாக ரோந்து மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

விருதுநகர்: ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் மாணவனுக்கு கண் பார்வை இழப்பு; பள்ளி நிர்வாகம் மீது வழக்கு

விருதுநகரில் அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் மாணவனின் இடது கண் பாதிக்கப்பட்டு செயல் இழந்துள்ளது.மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகேயுள்ளது எம்.புதுப்பட்டி இப்பகுதியைச் சேர்ந்தவர... மேலும் பார்க்க

பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் கொடுமை வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை!

2024 ஆண்டின் துவக்கத்தில் ஆடியோ ஒன்று வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் இருக்கும் உரையாடலை வைத்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் புகாரில் ம... மேலும் பார்க்க

அதிமுக முன்னாள் MLA கொலையில் 20 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு; பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளி!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பவாரியா கொள்ளையர்கள் 3 பேரை குற்றவாளி எனச் சென்னை நீதிமன்றம் இன்று (நவம்பர் 21) தீர்ப்பளித்திருக்கிறது.முன்னதாக, 2005 ஜனவரி 9-ம் தேதி கு... மேலும் பார்க்க

"அன்று 150 பவுன்; இன்று 40 பவுன்"-ஆடிட்டர் வீட்டைக் குறிவைத்து தொடர் கொள்ளை - பின்னணி என்ன?

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பழையபாளையம் அருகே கணபதி நகர் 4-வது வீதியைச் சேர்ந்தவர் ஆடிட்டர் துரைசாமி. இவரது மனைவி ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியர். இவர்களது மகள் ஜனனி பல் மருத்துவராக ஆஸ்திரேலியாவில் பண... மேலும் பார்க்க

சபரிமலை கோயில் தங்கம் கொள்ளையில் பங்கு; சி.பி.எம் நிர்வாகியான தேவசம்போர்டு முன்னாள் தலைவர் கைது!

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறை முன் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளின் தங்க கவசம் மற்றும் திருநடையில் பதிக்கப்பட்ட தங்கத்தை மோசடி செய்து கொள்ளையடிக்கப்பட்டது குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ... மேலும் பார்க்க

உருவக் கேலி செய்த அரசுப் பள்ளி ஆசிரியைகள்? - துயரத்தில் முடிந்த வால்பாறை மாணவியின் விபரீத முடிவு

கோவை மாவட்டம், வால்பாறை ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் – வத்சலகுமாரி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். மூத்த மகள் சஞ்சனா அங்குள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந... மேலும் பார்க்க