செய்திகள் :

Big Boss Kannada: `சாதி பாகுபாடு' - கிச்சா சுதீப், போட்டியாளர்கள் மீது மகளிர் ஆணையத்தில் புகார்

post image

கடந்த சில வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் எனப் பல மொழிகளில் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

கன்னட நட்சத்திரம் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் கன்னட நிகழ்ச்சிக்கு கர்நாடகா முழுவதும் அதிக பார்வையாளர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக கன்னட பிக் பாஸ் வீட்டுக்குக் கடந்த மாதம் சீல் வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

கிச்சா சுதீப்
கிச்சா சுதீப்

அதைத் தொடர்ந்து அந்தப் பிரச்னை சரிசெய்யப்பட்டு மீண்டும் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிலையில், சமூக ஆர்வலர் சந்தியா பவித்ரா என்பவர் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கிச்சா சுதீப் மீதும் போட்டியாளர்கள் அஸ்வினி கவுடா, ரஷிகா மீதும் கர்நாடக மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

அந்தப் புகாரில், ``கிச்சா சுதீப் ஒரு எபிசோடின் போது போட்டியாளர் ரக்ஷிதாவை நோக்கி அவமானகரமான கருத்துக்களைத் தெரிவித்தார். அவரின் தொனியும், கருத்தும் தேசிய தொலைக்காட்சியில் பெண்கள் மீதான அவமரியாதையை ஊக்குவிப்பதாக அமைந்திருந்தது.

மக்களிடம் மதிப்புள்ள நபரின் இத்தகைய கருத்துக்கள் பார்வையாளர்களை எதிர்மறையாகப் பாதிக்கும். பொழுதுபோக்கு இடங்களில் பெண்களை அவமானப்படுத்துவதை இயல்பாக்கும். போட்டியாளர்கள் ரஷிகா ஒரு தருணத்தில், மாலவள்ளி நடராஜை உடல் ரீதியாகத் தாக்கினார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் உடல் ரீதியான வன்முறை நிகழ்ச்சியின் நடத்தை விதிகளை நேரடியாக மீறுவதாகும். ரக்ஷிதாவைக் குறிவைத்து போட்டியாளர் அஸ்வினி கவுடா சாதி அடிப்படையிலான கருத்துக்களைத் தெரிவிக்கிறார்.

போட்டியாளரின் பின்னணியைக் கேலி செய்கிறார். பட்டியல் சாதி/பட்டியல் பழங்குடி அடையாளங்களை மறைமுகமாகக் குறிப்பிட "S பிரிவு" போன்ற குறியீட்டு மொழியைப் பயன்படுத்துகிறார். இத்தகைய நடத்தை சாதி பாகுபாட்டை நிலைநிறுத்துகிறது.

பிக் பாஸ் போன்ற பரவலாகப் பார்க்கப்படும் தளத்தில் இதை அனுமதிக்கக்கூடாது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நிகழ்ச்சியின் குழுவும் சேனலும் இன்னும் அதிகாரப்பூர்வ பதிலை வெளியிடவில்லை. ரியாலிட்டி ஷோவின் நெறிமுறைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்ந்து சரிவது விவாதத்தைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.

AR Rahman:``இங்கு இருக்கும் எனது ஒரே பிரச்னை" - தன் பயணம் குறித்து பகிர்ந்த் ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்ந்து ஆன்மீகம் சார்ந்தும், சூஃபியிசம் சார்ந்தும் இயங்கும் பயணம் குறித்து பேசி வருகிறார். சமீபத்தில் நிகில் காமத்தின் பாட்காஸ்டில் கலந்துகொண்டு பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், ``நான் அனைத்து மதங... மேலும் பார்க்க

"'காந்தா' படத்தின் அந்த சீனில் உண்மையிலேயே துல்கரை அடித்தேன்" - 'காந்தா' நடிகை பாக்யஶ்ரீ

அறிமுக இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த நவம்பர் 14ம் தேதி திரைக்கு வந்த படம் 'காந்தா'. 1950களில், தமிழ... மேலும் பார்க்க

கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷால் தம்பதிக்கு ஆண் குழந்தை! மகிழ்ச்சியுடன் பகிர்வு; குவியும் வாழ்த்துகள்

பாலிவுட் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃப் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.விக்கி கௌ... மேலும் பார்க்க

Rajisha Vijayan: `உன் நெனப்பே தூறல் அடிக்கும்' - நடிகை ரஜிஷா விஜயன் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | Photo Album

ரஜிஷா விஜயன்ரஜிஷா விஜயன்ரஜிஷா விஜயன்ரஜிஷா விஜயன்ரஜிஷா விஜயன்ரஜிஷா விஜயன்ரஜிஷா விஜயன்ரஜிஷா விஜயன்ரஜிஷா விஜயன்Bison: ``உன் படைப்பைப் பார்த்து பெருமைப்படுகிறேன்'' - மாரிசெல்வராஜை பாராட்டிய மணிரத்னம் மேலும் பார்க்க

Smriti Irani: `வட இந்திய சீரியலில் தோன்றும் பில் கேட்ஸ்' - Ex மத்திய அமைச்சர் அப்டேட்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடிக்கும் 'Kyunki Saas Bhi Kabhi Bahu Thi 2' என்ற சீரியலில் நன்கொடையாளரும், உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும... மேலும் பார்க்க

`கல் மரங்கள் டு கண்ணாடி வீடு’ - புதுப்பிக்கப்பட்ட புதுச்சேரி தாவரவியல் பூங்கா!

புதுப்பிக்கப்பட்ட புதுச்சேரி தாவரவியல் பூங்காசெயற்கை குளம்சிறுவர் ரயில்செல்பி பகுதிசிறுவர் பூங்காபூங்காவை சுற்றிப்பார்க்க இலவச பேட்டரி வாகனங்கள்செயற்கை நீரூற்றுபல லட்சம் ஆண்டுகளான கல் மரங்கள்கண்ணாடி வ... மேலும் பார்க்க