செய்திகள் :

அதிமுக முன்னாள் MLA கொலையில் 20 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு; பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளி!

post image

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பவாரியா கொள்ளையர்கள் 3 பேரை குற்றவாளி எனச் சென்னை நீதிமன்றம் இன்று (நவம்பர் 21) தீர்ப்பளித்திருக்கிறது.

முன்னதாக, 2005 ஜனவரி 9-ம் தேதி கும்மிடிப்பூண்டி அ.தி.மு.க எம்.எல்.ஏ சுதர்சனம் என்பவரை பவாரியா கொள்ளையர்கள் வீடு புகுந்து கொலை செய்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, பவாரியா கொள்ளையர்களைப் பிடிக்க ஐ.ஜி ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

ஓய்வுபெற்ற முன்னாள் ஐ.ஜி ஜாங்கிட்
ஓய்வுபெற்ற முன்னாள் ஐ.ஜி ஜாங்கிட்

ஜாங்கிட் தலைமையிலான தனிப்படைகள் வட மாநிலங்களில் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ஒரே மாதத்தில் 13 பேரைக் கைதுசெய்தது.

இந்தத் தேடுதல் வேட்டையின்போது A3, A4 நபர்களான இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட 13 பேரில், பவாரியா கொள்ளைக் கும்பல் தலைவன் A1 ஓமா உட்பட நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பு
தீர்ப்பு

பின்னர் அது சென்னை உயர் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அதன்படி நால்வரும் சிறையிலிருந்தபோது, A1 ஓமா சிறையிலேயே உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

மற்ற மூவர் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தனர். 9 பேர் ஜாமீனில் வெளியில் இருக்கின்றனர்.

இந்த நிலையில், அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ சுதர்சனம் கொலை வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் 3 பேரைக் குற்றவாளி எனச் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.

மேலும், தண்டனை விவரம் நவம்பர் 24-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் கொடுமை வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை!

2024 ஆண்டின் துவக்கத்தில் ஆடியோ ஒன்று வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் இருக்கும் உரையாடலை வைத்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் புகாரில் ம... மேலும் பார்க்க

"அன்று 150 பவுன்; இன்று 40 பவுன்"-ஆடிட்டர் வீட்டைக் குறிவைத்து தொடர் கொள்ளை - பின்னணி என்ன?

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பழையபாளையம் அருகே கணபதி நகர் 4-வது வீதியைச் சேர்ந்தவர் ஆடிட்டர் துரைசாமி. இவரது மனைவி ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியர். இவர்களது மகள் ஜனனி பல் மருத்துவராக ஆஸ்திரேலியாவில் பண... மேலும் பார்க்க

சபரிமலை கோயில் தங்கம் கொள்ளையில் பங்கு; சி.பி.எம் நிர்வாகியான தேவசம்போர்டு முன்னாள் தலைவர் கைது!

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறை முன் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளின் தங்க கவசம் மற்றும் திருநடையில் பதிக்கப்பட்ட தங்கத்தை மோசடி செய்து கொள்ளையடிக்கப்பட்டது குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ... மேலும் பார்க்க

உருவக் கேலி செய்த அரசுப் பள்ளி ஆசிரியைகள்? - துயரத்தில் முடிந்த வால்பாறை மாணவியின் விபரீத முடிவு

கோவை மாவட்டம், வால்பாறை ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் – வத்சலகுமாரி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். மூத்த மகள் சஞ்சனா அங்குள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந... மேலும் பார்க்க

UP: "அதனாலதான் கடிச்சு துப்பினேன்" - பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்று நாக்கைப் பறிகொடுத்த நபர்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகில் உள்ள தரியாப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சுமேதா(20) என்ற பெண் மண் அடுப்பு செய்வதற்குத் தேவையான மண் எடுப்பதற்காக அங்குள்ள கால்வாய் ஒன்றுக்குச் சென்றார். அவர் அங்... மேலும் பார்க்க

நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் போக்சோ கைதி தற்கொலை - அடுத்தடுத்து இரு சம்பவங்கள்

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியைச் சேர்ந்தவர் திருமலைக்குமார். சமீபத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்ப... மேலும் பார்க்க