செய்திகள் :

அமைச்சர் ஐ.பெரியசாமி குடும்பத்தினர் வீட்டில் 7 மணி நேரம் நீண்ட சோதனை - ஆவணங்களுடன் சென்ற அதிகாரிகள்!

post image

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி தன்னுடைய கணவர் துவாரநாதனுடன் திண்டுக்கல் வள்ளலார் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். துவாரநாதன் வத்தலகுண்டு அருகேயுள்ள ஓட்டுப்பட்டியில் 'அலமேலு மில்ஸ்' என்ற கார்மெண்ட்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இன்று மதியம் 2 மணி அளவில் இந்திராணியின் வீடு மற்றும் மில்லிற்கு வந்த ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு ( Directorate General of GST Intelligence (DGGI) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

கோவையிலிருந்து வந்த பெண் அதிகாரி உட்பட நான்கு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி

சோதனை நடைபெறுவதையொட்டி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா மற்றும் திமுகவினர் வீட்டின் முன் குவிய தொடங்கினர்.

துணை மேயர் ராஜப்பா, இந்திராணியின் வீட்டிற்குள் செல்ல முயற்சித்த போது அதிகாரிகள் அவரை வெளியே செல்ல சொல்லி அறிவுறுத்தி, வெளியேற்றினர்.

தொடர்ந்து மாலை 6 மணி அளவில் இந்திராணியின் வீட்டிற்கு ஐ.பி. செந்தில்குமாரின் மனைவி மெர்சி வந்தார். உடனே வெளியே வந்த அதிகாரிகள் அவரை வீட்டிற்குள் அழைத்து சென்றனர். மெர்சியிடமும் விசாரணை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.

துணை மேயர் ராஜப்பாவுடன் பேசும் அதிகாரிகள்

தொடர்ந்து, இரவு 8 மணியை கடந்தும் மூவரிடமும் விசாரணை நடைபெற்றதால் வீட்டின் வெளியே கூடியிருந்த திமுகவினர் அதிகாரிகளை 'வெளியே வா, வெளியே வா 'என்று கூச்சலிட தொடங்கினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்த இந்திராணி மற்றும் மெர்சி திமுகவினரை அமைதியாக இருக்க சொல்லி கேட்டுகொண்டதால் அமைதியானார்கள்.

இந்நிலையில் இரவு 9 மணி அளவில் சோதனை நிறைவடைந்து சில ஆவணங்களுடன் அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.

கடந்த 7 மணி நேரமாக ஐ.பெரியசாமியின் மகள், மருமகன், மருமகள் என மூவரையும் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் விசாரணை செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

"கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு; திமுக செய்த தவறு..." - எடப்பாடி பழனிசாமி

மதுரை மற்றும் கோவை மாவட்டங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது. இதற்கு கோவை மற்றும் மதுரையில் போதுமான மக்கள் தொகை இல்லாதது காரணமாக கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 20 லட்சம்... மேலும் பார்க்க

திண்டுக்கல்: அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் வீட்டில் ரெய்டு!

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி, திண்டுக்கல் வள்ளலார் நகரில் வசித்து வருகிறார். இன்று மதியம் அவரது வீட்டிற்கு வந்த ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ( Directorate General... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: `எப்டி ஓட்டுனாலும் ரோட்ல விழுறது சாதாரணமாகிடுச்சி’ - பழையபாளையம் சாலையின் அவலம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையபாளையம் ஊராட்சியில், கொடாக்காரமூலை முதல் பழையபாளையம் வரை செல்லும் சாலையானது சுமார் 1.5கி.மீ வரை ஐந்து வருடங்களாக குண்டும் குழியுமாக காட்சியளிப்பதோடு மட்டுமல்லா... மேலும் பார்க்க

ஏழை முதியவர் ரூ.1.14 கோடி; பந்தல் தொழிலாளி ரூ.5 கோடி வரி பாக்கி - அதிர வைத்த GST நோட்டீஸ்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி திருமாஞ்சோலை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. பந்தல் அமைக்கும் தொழில் செய்து வரும் ராமமூர்த்தியின் பெயரில் ரூ.5 கோடி ஜி.எஸ்.டி வரி பாக்கி இருப்பதாக நோட்டீஸ்... மேலும் பார்க்க

"திமுக தொழில்த்துறை முதலீடுகளில் ஊழல் பொய்" - பாமக அன்புமணி அடுக்கும் குற்றச்சாட்டுகள்

திமுக தலைமையிலான தமிழக அரசு, தொழில்துறை முதலீடுகளில் தொடர்ந்து ஊழலும், பொய்யான அறிவிப்புகளை அறிவித்து வருவதாக பாட்டளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகி... மேலும் பார்க்க

'விஜய் விமர்சனம் இனி வேண்டாம்' - திடீரென முடிவெடுத்த சீமான்? பின்னணி என்ன?

தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில மாநாட்டுக்குப் பிறகு விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துவந்த சீமான், இனி விஜய் மீதான விமர்சனங்களை குறைத்துக் கொள்ள முடிவெடுத்திருப்பதாக கூறுகிறார்கள் உட்கட்சி விவரம் அறிந்... மேலும் பார்க்க