செய்திகள் :

'விஜய் விமர்சனம் இனி வேண்டாம்' - திடீரென முடிவெடுத்த சீமான்? பின்னணி என்ன?

post image

தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில மாநாட்டுக்குப் பிறகு விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துவந்த சீமான், இனி விஜய் மீதான விமர்சனங்களை குறைத்துக் கொள்ள முடிவெடுத்திருப்பதாக கூறுகிறார்கள் உட்கட்சி விவரம் அறிந்த சிலர். இந்த முடிவின் பின்னணி என்ன?

2024 பிப்ரவரியில் த.வெ.க-வை தொடங்கினார் விஜய். அப்போது ஆரத்தழுவி வரவேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்து விஜய்யின் நடவடிக்கைகளை வரவேற்று பேசிவந்தார்.

2024 அக்டோபரில் நடந்த த.வெ.க-வின் முதல் மாநாட்டில் `நா.த.க-வை நட்பு சக்தியாக விஜய் முன்நிறுத்துவார்’ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீமானை மறைமுகமாக விமர்சித்து அதிர்ச்சி கொடுத்தார் விஜய்.

சீமான், விஜய்

2024 நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் இதற்கு எதிர்வினையாற்றிய சீமான், "திராவிடம் வேறு, தமிழ்த் தேசியம் வேறு. தமிழர்களுக்குத் திராவிடம் அயலமை. இரண்டும் ஒன்று எனக் கூறுவது அடிப்படை தவறு.

இது கொள்கை அல்ல… கூமுட்டை. அழுகிய கூமுட்டை. இது நடுநிலை அல்ல… கொடுநிலை. கொடும் சிறையிலிருந்து ரத்தம் சிந்தி வந்தவன் நான். சத்தமா பேசுகிறேனா? ஆமாம், சரக்கு இருக்கு, கருத்து இருக்கு. அதனால்தான் சத்தமா பேசுறேன்” என விளாசினார். இதிலிருந்து தொடங்கிய நா.த.க – த.வெ.க வார்த்தை போர், கரூர் சம்பவத்தின்போது உச்சத்தைத் தொட்டது.

நம்மிடம் பேசிய நா.த.க கொள்கை பரப்புச் செயலாளர்கள் “நா.த.க-வின் இளைஞர் வாக்குகளையும், அ.தி.மு.க-வின் தி.மு.க எதிர்ப்பு வாக்குகளையும் குறிவைத்தே வியூகம் அமைத்தார் ஜான் ஆரோக்கியசாமி. ஆகையால் விஜய்யை இளைஞர்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் கடுமையாக விமர்சித்தோம்.

அதில் நாங்கள் வெற்றிப் பெற்றதாகவும் நினைக்கிறேன். களச் செயல்பாடுகள் இன்றி கரூர் விவகாரத்துக்கு பின் தவெக பின்னடைவை சந்தித்து வருகிறது. தற்போது தேர்தல் நெருங்கும் நிலையில் தி.மு.க, பா.ஜ.க கூட்டணிகள்மீது கவனத்தை திருப்பி அவர்களை டார்கெட் செய்வதே நம் வேலை என சீமான் முடிவு செய்துள்ளார்.” என்றனர்.

கரூர், விஜய்
கரூர், விஜய்

சீமான் இந்த முடிவை எடுக்க சில சம்பவங்களும் இருக்கின்றன எனப் பேசத் தொடங்கினார்கள் தலைமைக்கு நெருக்கமானவர்கள் சிலர், "சென்னையில் முத்துராமலிங்க தேவர் நினைவு பொதுக்கூட்டமும், திருவாரூரில் நடந்த தண்ணீர் மாநாட்டு பொதுக்கூட்டத்திலும் சீமான் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினார்.

அதே நேரத்தில் விஜய்மீதும் லேசான விமர்சனங்களை வைத்தார். ஆனால் கூட்டத்தின் நோக்கத்தை விட ‘விஜயை சாடிய சீமான்’ எனும் பகுதி மட்டும் வைரலாக்கப்பட்டது, அதனை அண்ணன் சீமான் விரும்பவில்லை. களச் செயல்பாடுகளற்ற கட்சியை தொடர்ந்து பேசிக் கொண்டே அவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டாம்; தி.மு.க பாணியில் ‘கில்லிங் இன் சைலன்ஸ்’ வியூகத்திலேயே எதிர்க்கலாம் என முடிவு செய்திருக்கிறோம்.” என்றனர்.

சீமான், ரஜினி
சீமான், ரஜினி

இதன்பின்னே சில அரசியல் கணக்குகள் இருப்பதாக சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள் ஒருசிலர் "விஜயின் அரசியலை அம்பலப்படுத்தினால் அவரது அபிமானிகள் நா.த.க-வுக்கு திரும்புவார்கள் என்பது நா.த.க-வின் கணக்கு. ஆனால் கடுமையான விமர்சனங்களும் இரண்டாம் கட்ட நிர்வாகிகளின் மோசமான குற்றச்சாட்டுகளும் விஜய் ரசிகர்களைத் கொதிப்படைய செய்துவிட்டன.

ஒருவேளை விஜய் அரசியலை விட்டே போனாலும், ‘சீமானுக்கு வாக்களிக்கக் கூடாது’ என்ற மனநிலைக்கு விஜய் ரசிகர்கள் வந்துவிட்டனர் என்பதை நா.த.கவினர் தற்போது உணர்ந்திருக்கிறார்கள். இதை சரிகட்டவே விஜய் விமர்சனத்தை குறைக்க சீமான் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது கடுமையாக விமர்சித்த சீமான், ரஜினி ‘கட்சி தொடங்கவில்லை’ என அறிவித்தபின், ‘அரசியல் ரீதியாக வைத்த விமர்சனங்கள் ரஜினியையோ அவரது ரசிகர்களையோ காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்’ என்று கூறினார். அதேபாணியில் விஜய் ரசிகர்களை கையாளும் வியூகமாகக்கூட இருக்கலாம்.” என்றனர்

"திமுக தொழில்த்துறை முதலீடுகளில் ஊழல் பொய்" - பாமக அன்புமணி அடுக்கும் குற்றச்சாட்டுகள்

திமுக தலைமையிலான தமிழக அரசு, தொழில்துறை முதலீடுகளில் தொடர்ந்து ஊழலும், பொய்யான அறிவிப்புகளை அறிவித்து வருவதாக பாட்டளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகி... மேலும் பார்க்க

"S.I.R என்பது குடியுரிமை, எதிர் வாக்குகளை நீக்கும் பாஜகவின் செயல்திட்டம்" - திருமா

'S.I.R' எனும் சிறப்புத் தீவிரத் திருத்தம் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு செயல்படுத்தப்படுவதை எதிர்த்து திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளால் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன... மேலும் பார்க்க

விருதுநகர்: ``வாரச்சந்தைக்கு நிரந்தர இடம் வேண்டும்'' - நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்

விருதுநகர், ஆவியூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த காய்கறி வியாபாரிகள் விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட ஏ.ஏ.சாலையில் திங்கள்தோறும் வாரச்சந்தை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். அப்போது, அங்கு வியாபார... மேலும் பார்க்க

"ஆணவம் வேண்டாம் உதயநிதி; நீங்களே வாரிசை வைத்து வந்தவர்" - தமிழிசை செளந்தரராஜன் காட்டம்!

திமுக தொடங்கப்பட்டு 75 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அக்கட்சியின் இளைஞர் அணி சார்பில் 'தி.மு.க 75 அறிவுத்திருவிழா' என்னும் நிகழ்ச்சி நவம்பர் 8-ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 16- ஆம் தேதி வரை நடைபெற்றது.இந்ந... மேலும் பார்க்க

டெல்லி குண்டு வெடிப்பு: ``எந்த ஆதாரமும் இல்லை'' - 3 மருத்துவர்களை விடுவித்த NIA

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை (10-ம் தேதி) நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தொடர்பு... மேலும் பார்க்க

மதுரை: ``குப்பை மேடாக காட்சியளிக்கும் கிருதுமால் நதி; நோய் பரவும் அபாயம்'' - மக்கள் அச்சம்

மதுரை சப்பாணி கோயில் தெரு, மீனாட்சி தியேட்டர் அருகில் உள்ள கிருதுமால் ஆற்றின் அருகில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆற்றின் குப்பைகளை இருபுறமும் குவித்து வைத்து சென்... மேலும் பார்க்க