"பெண்கள் கரு முட்டைகளை சேமிக்க வேண்டும்"- விவாதம் தூண்டிய ராம் சரண் மனைவியின் கர...
BB Tamil 9: "அவுங்க ரொம்ப வொர்ஸ்ட்டா இருக்காங்க"- சாண்ட்ராவை சாடிய ஹவுஸ் மேட்ஸ்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர்.
கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில் திவாகர் வெளியேற்றப்பட்டார்.
இந்த வாரம் 13 பேர் நாமினேஷனில் இடம் பெற்றிருக்கின்றனர்.

இந்த வாரம் சோறு, சோப்பு, மாப்பு என்ற பெயரில் டாஸ்க் நடக்கிறது. மூன்று அணிகளாக பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வருகின்றனர்.
இன்று வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், " சாண்ட்ரா தான் வொர்ஸ்ட் பெர்பாமர். ரொம்ப வொர்ஸ்ட்டா பண்றாங்க" என ரம்யா சொல்ல "அவுங்க ரொம்ப பயப்படுற மாதிரி நடிக்குறாங்க" என வினோத் சொல்கிறார்.
தொடர்ந்து வினோத், ரம்யா, சபரி, எல்லாரும் கனி தான் கிட்சன் டீம்மின் பெஸ்ட் பெர்பாமர் என்று கூறுகின்றனர். "இந்த டாஸ்க்கில பார்வதியோட உண்மையான முகம் இப்போ தான் வெளியே வருது. அதை வெளியே வரவிடுங்க" என ஹவுஸ்மேட்ஸிடம் FJ சொல்கிறார்.




















