பீகார்: 10வது முறையாக முதல்வராக பதவியேற்ற நிதீஷ் குமார் - இரு துணை முதல்வர்கள் ...
BB Tamil 9: "என்னோட கேம் கேவலமான கேம்; இனி நான் இந்த டீம்ல இல்ல" - காட்டமான கனி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர்.
கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில் திவாகர் வெளியேற்றப்பட்டார்.
இந்த வாரம் 13 பேர் நாமினேஷனில் இடம் பெற்றிருக்கின்றனர்.

இந்த வாரம் சோறு, சோப்பு, மாப்பு என்ற பெயரில் டாஸ்க் நடக்கிறது. மூன்று அணிகளாக பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வருகின்றனர்.
இன்று வெளியான முதல் புரொமோவில் "டாஸ்க்கில கேட்டா பண்ணி தரணும் அதுதான் கேம்" என கிட்சன் டீமில் இருக்கும் கனி திரு கத்த "தான் ரொம்ப நியாமான சமையல்காரவுங்க'னு காமிச்சுக்குறாங்க" என விஜே பார்வதி சாண்ட்ராவிடம் சொல்கிறார். "என்னோட கேம் கேவலமான கேம்..ஓகே... நான் இனி இந்த கிட்சன் டீமில இல்ல" என்று கனி கோபப்படுகிறார்.

















