செய்திகள் :

படத் திருட்டு மோசடி: பிரபல இணையதள மூளையாக செயல்பட்டவர் கைது - பாராட்டும் பவன் கல்யாண்!

post image

திரைப்படத் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரைத் துறையினருக்கும் பெரும் சிக்கலாக இருந்தது திரைப்படத் திருட்டு (Piracy).

திரைப்படம் திரையரங்குக்கு வந்த உடனே, அதை இணையதளத்தில் பதிவேற்றுவதால், திரைத் துறையினருக்கு ஆயிரகணக்கான கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

அதைத் தொடர்ந்து திரைப்படத் திருட்டில் ஈடுபடுபவர்களைக் கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து திரைத் துறையினர் வலியுறுத்தி வந்தனர்.

piracy
piracy

இந்த நிலையில், தெலுங்கு திரையுலகை அச்சத்தில் ஆழ்த்தி வந்த ஐபோமா (iBomma) மற்றும் பாப்பம் (Bappam) என்ற இணையதளம் வழியே தெலுங்கு திரைப்படங்களை பதிவேற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், இந்த இணையதளத்துக்கு 65-க்கும் மேற்பட்ட "போலி இணையதளங்கள் (Mirror Websites) இருந்தது. ஒரு இணையதளம் முடக்கப்படும்போது, அதே உள்ளடக்கத்துடன் மற்றொரு "மிரர் சைட்" உடனே செயல்படத் தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த திரைப்படத் திருட்டுக்கு மூளையாகச் செயல்பட்ட ரவி எமாண்டி (39) என்பவரை தெலங்கானா காவல்துறை கைது செய்திருக்கிறது.

இது தொடர்பாக ஹைதராபாத் நகர காவல்துறை ஆணையர் வி.சி. சஜ்ஜனார், ``தெலங்கானாவில், ஐபோமா மற்றும் பாப்பம் என்ற பெயரில் மோசடிக்கு மூளையாக செயல்பட்ட நபரை ஹைதராபாத் சைபர் கிரைம் பிரிவு கைது செய்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் லட்சக்கணக்கான பயனர்களை சட்டவிரோத பந்தய தளங்களுக்குத் திசை திருப்பி, பெரிய அளவிலான நிதி மோசடி மற்றும் தரவு திருட்டும் செய்திருக்கின்றனர்.

தெலங்கானா காவல்துறை
தெலங்கானா காவல்துறை

இந்த வழக்கில் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவரும், தற்போது கரீபியன் குடிமகனுமான ரவி எமாண்டி என்பவர், ஹைதராபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கைது செய்யப்பட்டார்.

செப்டம்பர் மாத தொடக்கத்தில் இவரின் கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். ரவி எமாண்டி திருட்டு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்பு, ஹைதராபாத்தில் ஒரு வலை சேவை நிறுவனத்தை நடத்தி வந்திருக்கிறார்.

2019-ம் ஆண்டு கொரோனாவின் போது iBomma ஐத் தொடங்கினார். இந்த வலைத்தளத்தில் மாதத்திற்கு கிட்டத்தட்ட 5 மில்லியன் பயனர்கள் வந்து செல்கின்றனர்.

பல மொழிகளில் கிட்டத்தட்ட 21,000 திரைப்படங்களைக் கொண்ட ஹார்டு டிரைவ்களை பறிமுதல் செய்திருக்கிறோம். திரைப்பட திருட்டு, ஆன்லைன் மோசடி மற்றும் தரவு திருட்டு தொடர்பான நான்கு வழக்குகள் குற்றம்சாட்டப்பட்டவர் மீது பதிவு செய்திருக்கிறோம்." என்றார்.

இந்த வழக்கில் தெலங்கானா காவல்துறையின் சீரிய செயல்பாட்டுக்கு ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,``ஐபோம்மா மற்றும் பப்பம் வலைத்தளங்களை மூடக்கியதற்கும், இந்த வலைத்தளங்களை நடத்துபவர்களைக் கைது செய்ததற்கும் ஹைதராபாத் காவல்துறையினருக்கு என் பாராட்டுகள்.

புதிய படம் வெளியாகும் போதெல்லாம், ஐபோம்மா மற்றும் பப்பம் நிறுவனங்களுக்காகப் பணியாற்றும் கும்பல் முதல் நாளிலேயே இந்தப் படங்களின் நகலை இணையத்தில் பதிவேற்ற முடிந்தது. இதன் விளைவாக திரைப்படத் துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

இதுபோன்ற சினிமா திருட்டுத்தனத்தால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டனார். ஹைதராபாத் காவல்துறையின் சைபர் கிரைம் குழு திருட்டு கும்பலைக் கைது செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறது.

பந்தய மாஃபியாக்கள் மற்றும் குடும்பங்களை அழிக்கும் போன்ஸி திட்டங்களை நடத்துபவர்கள் மீதும் உன்னிப்பாகக் கவனித்து, கண்காணித்ததற்கும் காவல்துறைக்கு நன்றி. இந்த நடவடிக்கை தெலுங்கு திரையுலகிற்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள சினிமா துறைக்கே பயனளிக்கும்" என்றார்.

நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் போக்சோ கைதி தற்கொலை - அடுத்தடுத்து இரு சம்பவங்கள்

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியைச் சேர்ந்தவர் திருமலைக்குமார். சமீபத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்ப... மேலும் பார்க்க

பெங்களூரு: ATM-க்கு வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.7.11 கோடி கொள்ளை - என்ன நடந்தது? சந்தேகம் என்ன?

நேற்று பெங்களூரில் பட்டப்பகலில் ஏ.டி.எம்மிற்கு எடுத்து சென்ற ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? சி.எம்.எஸ் இன்ஃபோ சிஸ்டம் என்னும் கம்பெனியின் வாகனம் பெங்களூரு ஜே.பி நகரில் உள்ள தனியா... மேலும் பார்க்க

விருதுநகர்: புகாரளிக்க வந்த பெண்ணுடன் திருமண மீறிய உறவு; காவலர் சஸ்பெண்ட்

விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் ஒருவருக்கு பணம் கொடுத்து வாங்க முடியாததால் இளம்பெண் ஒருவர் புகார் அளிக்க வந்துள்ளார்.இதுதொடர்பாக அந்தக் காவல் நிலையத்தில் ஆய்வாளர் தலைமை... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: ரத்த வெள்ளத்தில் சடலமாக மனைவி; திருமணமான 4வது மாதத்தில் நடந்த கொடூரம்; என்ன நடந்தது?

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா, பாக்கம், சிலாவட்டம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். லாரி டிரைவரான இவரின் மகள் மதுமிதாவும் அதே பகுதியைச் சேர்ந்த சரண் என்பவரும் காதலித்து க... மேலும் பார்க்க

மனிதர்களை கொன்று குவிக்க இத்தாலியர்கள் சென்ற இன்பச் சுற்றுலா? - 90-களில் நேர்ந்த கொடூரம்!

பொதுவாக சுற்றுலா எதற்கு செல்வோம்? குடும்பம் அல்லது ஃபிரண்ட்ஸ் உடன் ஜாலி ட்ரிப், சுற்றி பார்க்க, குறிப்பிட்ட ஏதோ ஒரு இடத்தை பார்க்க வேண்டும் போன்ற காரணங்களுக்காக தானே? ஆனால், 1990-களில், மனிதர்களை சுட்... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: மாணவி குத்தி கொலை; வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபரை ஒப்படைக்க கோரி உறவினர்கள் சாலை மறியல்

கொலையாளியை ஒப்படைக்க கோரி காவல் நிலையம் முற்றுகைராமேஸ்வரம் சேரான்கோட்டை பகுதியை சேர்ந்த மாணவி ஷாலினி ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் வசித்து வ... மேலும் பார்க்க