ADMK : ''கள்ள ஓட்டுப் போடுவதில் திமுகதான் Expert!' - ஜெயக்குமார் கடும் தாக்கு
`ஒரு மாநிலத்துக்கு இரு அதிகார அமைப்புகளை ஏற்க முடியாது’ - உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாகக் கிடப்பில் போட்டதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் 8 தேதி, ``தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்காமல். அவற்றை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரை செய்தது சட்டவிரோதம்.

அந்த 10 மசோதாக்களும் உடனடியாகச் சட்டமாக்கப்பட்டு, அமலுக்கு வந்துவிட்டன. மறுநிறைவேற்றம் செய்து அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், குடியரசுத் தலைவர் 3 மாதங்களிலும் முடிவெடுக்க வேண்டும்” எனக் காலக்கெடு நிர்ணயம் செய்து தீர்ப்பளித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மே 13-ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 143-ஐ பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை எழுப்பி, விளக்கம் கோரி கடிதம் அனுப்பியிருந்தார்.
இது தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் கடந்த செப்டம்பர் மாதம் தொடர்ந்து 10 நாள் விசாரிக்கப்பட்டது.
இதில், தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, ஹரீஷ் உள்ளிட்டோரும், மத்திய அரசு வழக்கறிஞர்களும் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தின் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீர்ப்பை வாசித்தனை. அந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் கீழே..
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
1. மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு எதையும் நீதிமன்றத்தால் விதிக்க முடியாது.
2. மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்கிறார் என்றால் அதற்கான காரணங்களை மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
3. தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் இவ்வாறு கால வரம்பை நிர்ணயித்திருந்தது என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
4. ஒரு மசோதா மீது காரணமே இல்லாமல் நீண்ட காலத்திற்கு ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார் என்றால் சம்பந்தப்பட்ட மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடலாம்.
5. இருப்பினும் ஆளுநருக்கு நீதிமன்றங்களால் எந்த உத்தரவையும் போட முடியாது. மசோதாக்கள் மீது முடிவெடுங்கள் என கேட்டுக் கொள்ளத்தான் முடியும்.
6. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தான் மாநிலத்தை முழுமையாக செலுத்தக்கூடிய அதிகார அமைப்பாக இருக்க வேண்டும். ஒரு மாநிலத்திற்கு இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவதை ஏற்க முடியாது.















