செய்திகள் :

தவெக: "விஜய் கவனமாக இருக்கணும்; அவரைச் சுத்தி நிறைய சகுனிகள் இருக்காங்க" - பி.டி.செல்வகுமார்

post image

தவெக தலைவர் விஜய்யைச் சுற்றிலும் சூழ்ச்சி வலை இருப்பதாக அவருக்கு 27 ஆண்டுகளாக மேனேஜராகப் பணியாற்றி வந்த பி.டி.செல்வகுமார் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் விவேக் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (நவ.19) 'கலப்பை மக்கள் இயக்கம்' சார்பாக 'புலி' படத் தயாரிப்பாளரும், தவெக கட்சித் தலைவர் விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேனேஜராகப் பணியாற்றியவருமான பி.டி.செல்வகுமார் சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் பார்க் அருகில் 100 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் வறுமையில் உள்ள சினிமா காமெடி நடிகர்களுக்கு பண உதவி செய்திருந்தார்.

தவெக விஜய்
தவெக விஜய்

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பி.டி.செல்வகுமார், "விஜய்யுடன் 27 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். விஜய் இப்படி மாபெரும் நட்சத்திரமாக வளர்ந்து இருப்பதில் என்னுடைய பங்கும் இருக்கிறது.

நட்சத்திரம் விஜய்தான். ஆனாலும் அதற்கு உறுதுணையாக நான் இருந்திருக்கிறேன். நான் நேர்மையாக இருந்ததால்தான் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் ஆகியோருடன் பல ஆண்டுகள் பயணிக்க முடிந்தது.

இந்தச் சூழலில் வேதனையுடன் ஒன்று சொல்லிக் கொள்கின்றேன். புலி திரைப்படம் வெளியாகும் முன் என்னுடைய வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனைக்கு மிக முக்கிய காரணமாக விஜய்யுடன் நெருக்கமாக இருந்தவர்கள்தான் என, எனக்கு சோதனை செய்ய வந்த அதிகாரிகளே தெரிவித்தார்கள். அந்தக் கள்ள நபர்கள் யார்? என்பதை விஜய் அடையாளம் காண வேண்டும்.

மகாபாரதத்திற்கு மிகப் பெரிய காரணமே சகுனிதான். ராமாயணத்திற்கு மிகப்பெரிய காரணமே கைகேயிதான். அதே போல விஜய்யைச் சுற்றிலும் சூழ்ச்சி வலையானது இருக்கிறது.

தவெக விஜய்
தவெக விஜய்

அவர் கவனமாக இருக்க வேண்டும். விஜய்யைச் சுற்றி நிறைய சகுனிகள் இருக்கிறார்கள். அவர்களை அவர் அடையாளம் காண வேண்டும். நல்லவர்களை விஜய் தன்னுடன் வைத்துக்கொள்ளவேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

Sai Pallavi: 'Happie Happie' - நடிகை சாய் பல்லவி லேட்டஸ் க்ளீக்ஸ் | Photo Album

Ramya pandian: நடிகை ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Photo Album மேலும் பார்க்க

கல்யாணி பிரியதர்ஷனின் புதிய தமிழ்ப் படம்; பட பூஜையுடன் தொடக்கம் | Photo Album

‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என 6 வெற்றிப்படங்களைத் தந்த 'Potential Studios' நிறுவனம் தயாரிக்கும் ஏழாவது படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கல்யாணி பிரியதர்ஷன்... மேலும் பார்க்க

Keerthy Suresh: "அந்த மாதிரி டிரெஸ் போட்டிருந்தேனானு..." - ஏ.ஐ எடிட்கள் குறித்து கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படம் இம்மாத ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் இப்போது கீர்த்தி சுரேஷ் களமிறங்கிவிட்டார். இன்று அப்படத்திற்காக செய... மேலும் பார்க்க

"என் பெயரை வைத்து தவறான செயலில் ஈடுபடுகிறார்கள்" - தனுஷின் மேலாளார் ஸ்ரேயாஸ் அளித்த விளக்கம்!

சின்னத்திரை நடிகையான மான்யா ஆனந்த் அண்மையில் யூடியூப் நேர்காணல் ஒன்றில், "நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் என ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தினார். பிறக... மேலும் பார்க்க

"தனுஷ் மீது நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை" - நடிகை மான்யா விளக்கம்!

நடிகை மான்யா ஆனந்த், நடிகர் தனுஷ் குறித்து பேசியதாக எழுந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. இந்த விவகாரம் வைரலானதை தொடர்ந்து மான்யா ஆனந்த் தற்போது இது குறித்து ஒரு விரிவான விளக்கத்தை அளித்து... மேலும் பார்க்க