செய்திகள் :

கோவை: "விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை?" - பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

post image

நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு வைத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய அரசைக் கண்டித்து தற்போது பதிவிட்டிருக்கிறார்.

மு.க ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் சமூக வலைத்தளப் பதிவில், "கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி மாண்புமிகு பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை?

கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்?

கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்?

மு.க ஸ்டாலின்
மு.க ஸ்டாலின்

உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

கழுகார் : டெல்லி அசைன்மென்ட்; கன்ஃபியூஸ் ஆன நயினார் டு டெல்லி வழி சிபாரிசு; கடம்பூர் ராஜூ டென்ஷன்!

டென்ஷனாகும் கடம்பூர் ராஜூ!டெல்லி வழியாக சிபாரிசு...2026 சட்டமன்றத் தேர்தலை அ.தி.மு.க - பா.ஜ.க இணைந்து சந்திக்க ஏற்பாடாகிவருகிறது. இருப்பினும், தொகுதிப் பங்கீடு குறித்து இரு தரப்புக்குமிடையே இன்னும் பே... மேலும் பார்க்க

மெட்ரோ விவகாரம்: `பெருந்தன்மையான ஒப்புதலை மதிக்காமல்.!' - மனோகர் லால் கட்டார் விளக்கம்

மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்திருக்கிறது. இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு... மேலும் பார்க்க

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை - அரச நீதி தவறியதற்கு தண்டனையா அல்லது பழி தீர்க்கும் அரசியலா?

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)முன்னாள் ஆசிரியர், பிபிசி உலக சேவை, லண்டன்கட்... மேலும் பார்க்க

அன்று அதிமுக வட்டச் செயலாளர்; இன்று இங்கிலாந்தில் மேயர் வேட்பாளர் - தாமோதரன் சீனிவாசன் சாதித்த கதை!

சென்னையில் அஇஅதிமுக வட்டச் செயலாளராக இருந்த ஒருவர் இங்கிலாந்தில் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் 'தொழிலாளர் கட்சி'யில் வளர்ந்து வரும் முக்கியமான ஒரு தலைவராக இருப்பதுடன் லண்டனில் உள்ள க்ரேடன் நகராட்சிய... மேலும் பார்க்க