’தேவதைக்குத் தந்தையாகியுள்ள பிரேம்ஜிக்கு வாழ்த்துகள்’ - வல்லமை பட இயக்குநர் நெகி...
BB Tamil 9: "பட வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு; பிக் பாஸ் வீட்டுல 100 நாள் இருக்க முடியாது" - திவாகர்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் விஜய் டிவிக்கு அவர் பேட்டி அளித்திருக்கிறார்.

அதில் பேசியிருக்கும் திவாகர், "'60 நாள் மட்டும்தான் பிக் பாஸ் வீட்டில இருக்கணும்'னு நினைச்சு போனேன். முதல் நாள் பிக் பாஸ் கேட்கும்போதும், 'நான் 60 நாள்தான் இருப்பேன்'னு சொன்னேன். என்னோடே கமிட்மென்ட்டால 100 நாள் பிக் பாஸ் வீட்டில இருக்க முடியாது.
கிளீனிக் வச்சிருக்கேன். நாய்கள் வளர்த்துகிட்டு இருக்கேன். அதுமட்டுமில்லாம இப்போதான் சோசியல் மீடியால வைரலாக ஆரம்பிச்சுருக்கேன். ஒரு சில பட வாய்ப்புகளும் வந்திட்டு இருக்கு. அதுனால என்னால பிக் பாஸ் வீட்டில 100 நாள் இருந்திருக்க முடியாது" என்று தெரிவித்திருக்கிறார்.



















