பீகார்: ``எனக்கு பெரிய அதிர்ச்சி" - தேர்தல் சவால் குறித்துப் பேசிய பிரசாந்த் கிஷ...
’தேவதைக்குத் தந்தையாகியுள்ள பிரேம்ஜிக்கு வாழ்த்துகள்’ - வல்லமை பட இயக்குநர் நெகிழ்ச்சி
நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி மற்றும் இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்ததாக 'வல்லமை’ பட இயக்குநர் கருப்பையா முருகன் தனது ஃபேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி வெளியானதையடுத்து, திரையுலகினரும் ரசிகர்களும் பிரேம்ஜி தம்பதிக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் கருப்பையா தனது பேஸ்புக் பதிவில், "தேவதைக்கு (பெண் குழந்தை) தந்தையாகியுள்ள நமது கதைநாயகன் பிரேம்ஜிக்கு வாழ்த்துகள்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.
பிரேம்ஜி கதாநாயகனாக நடித்த 'வல்லமை' படத்தை கருப்பையா இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரேம்ஜிக்கும், இந்துவுக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த திருமணத்தைத் தொடர்ந்து, திரைத்துறை நண்பர்களுக்காக வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிலையில் பிரேம்ஜி - இந்து தம்பதி தங்களது முதல் குழந்தையை வரவேற்றுள்ளதாக இயக்குநர் கருப்பையா முருகன் தெரிவித்துள்ளார்.சமூக வலைதளங்களில் #Premgi, #BabyGirl போன்ற ஹேஷ்டேக்குகள் மூலம் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
















