செய்திகள் :

மாண்புமிகு பறை: "பசி பொறுக்க முடியாம ஒரு ஓட்டலுக்கு போய் சர்வர் வேலை கேட்டேன்"- பாக்யராஜ் ஷேரிங்ஸ்

post image

பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார்.

தேவா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று கவனம் ஈர்த்த இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது.

 ‘மாண்புமிகு பறை’
‘மாண்புமிகு பறை’

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் (நவ.18) நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு தன்னுடைய அனுபவம் குறித்து பேசிய இயக்குநர் பாக்யராஜ், " சினிமாவுக்காக நான் சென்னைக்கு வரும்போது ஒருத்தர் அட்வைஸ் கொடுத்து அனுப்பி வச்சாரு.

'என்ன கஷ்டம் வந்தாலும் எவ்வளவு பசி, பட்னி வந்தாலும் தயவு செஞ்சு ஹோட்டல்ல சர்வர் வேலைக்கு மட்டும் போயிராத' அப்படின்னு சொன்னாரு.

ஏன் அப்படி சொன்னாருன்னு அப்போ புரியல. சினிமால வாய்ப்பு கிடைக்கிறதுக்கு முன்னாடி தமிழ்நாடு, ஆந்திரா எல்லாம் சுத்தினேன்.

பசி பொறுக்க முடியாம ஒரு ஓட்டலுக்கு போய் சர்வர் வேலை கேட்டேன். அந்த ஓனர் முதல்ல போய் சாப்பிடு. அப்புறம் வேலை பார்க்கலாம் அப்படின்னு சொன்னாரு. நானும் சாப்பிட்டேன்.

சாப்பிட்டு வந்தவுடனே ரெண்டு ரூபா கையில கொடுத்தாரு. `இதை வச்சிக்கிட்டு எந்த ஊருக்கு போணும்மோ போயிரு' அப்படின்னு சொன்னாரு.

சினிமாவில சாதிக்கணும்னு வந்த எனக்கு திரும்ப ஊருக்கு போக விருப்பம் இல்ல.

பாக்யராஜ்
பாக்யராஜ்

அந்த ஹோட்டல்லயே வேலை பண்ணுறேன்னு சொன்னேன். 'நீ நினைக்கிற மாதிரி இது சாதாரண வேலை இல்ல தம்பினு' அந்த ஓனர் சொன்னாரு.

எந்த வேலைக்கு என்ன போக வேணாம்னு சொன்னாங்ளோ, அந்த வேலைக்கு நான் தகுதி இல்லன்னு அப்போ தான் புரிஞ்சிகிட்டேன்.

'சர்வர் வேலை கிடைச்சிருச்சுனா இடமும், சாப்பாடும் ஃப்ரீயா கிடைச்சிரும். நல்லா சாப்பிடுவோம். நல்லா தூங்குவோம். அப்புறம் எங்க நீ சான்ஸ் தேட போற அப்படிகிற அர்த்தத்துலதான் அவர் எனக்கு அட்வைஸும் பண்ணிருக்காரு'.

இப்படி வாழ்க்கையில, நிறைய பாடங்களும், விஷயங்களும் கத்துக்கிட்டேன்" என பாக்யராஜ் பேசியிருக்கிறார்.

’தேவதைக்குத் தந்தையாகியுள்ள பிரேம்ஜிக்கு வாழ்த்துகள்’ - வல்லமை பட இயக்குநர் நெகிழ்ச்சி

நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி மற்றும் இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்ததாக 'வல்லமை’ பட இயக்குநர் கருப்பையா முருகன் தனது ஃபேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளார்.இந்த செய்தி வெளியானதையடுத்து, திரையுலக... மேலும் பார்க்க

''இது யாரும் செய்திடாத சாதனை" - தனி ஒருவராக முழு படத்தையும் எடுத்திருக்கும் சங்ககிரி ராஜ்குமார்

எப்போதுமே ஒரு திரைப்படத்தை முழுமையாக எடுத்து முடிப்பதற்கு, அத்தனை துறைகளிலிருந்தும் பலரின் பங்களிப்பு தேவைப்படும். தனி நபரால் ஒரு திரைப்படத்தை எடுத்து முடிக்கமுடியுமா எனக் கேட்டால், அனைவரின் பதிலும் ச... மேலும் பார்க்க

ஷூட்டிங்கில் ரஜினி சார் சொன்ன விஷயம் - இதுவரை வெளிவராத தகவலைச் சொல்லும் போஸ் வெங்கட்

சென்னையில் உள்ள அண்ணா சாலையில் ஃபிலிம் சேம்பரில் ஒரு காலத்தில் செயல்பட்ட திரைப்படப் பயிற்சி கல்லூரியில் ரஜினிகாந்த், முதல் சிரஞ்சீவி வரை பலரும் ஆக்ட்டிங் கோர்ஸை பயின்றிருக்கிறார்கள். அங்கே நடிப்பு கற்... மேலும் பார்க்க

Shriya Saran: ``யார் இந்த முட்டாள்?" - ஆத்திரத்தில் கொந்தளித்த நடிகை ஸ்ரேயா; என்ன நடந்தது?

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரன். ஷ்ரியா ஆண்ட்ரி கோஷீ என்பவரைத் திருமணம் செய்துகொண்டதற்குப் பிறகு நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். இந்தத் தம்பதிக்... மேலும் பார்க்க

Tulasi: 'டிசம்பர் 31-ல் ரிடையர்மெண்ட்' - சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறாரா நடிகை துளசி?

நடிகை துளசி சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிகளிலும் பல வகையான கதாபாத்திரங்களிலும் துளசி நடித்து வந்தவர். ரஜினி... மேலும் பார்க்க

மாண்புமிகு பறை: ``ஆஸ்திரேலியாவில் என்னை அழைத்து கௌரவித்தது ஏன்?'' -இசையமைப்பாளர் தேவா சொன்ன விளக்கம்

பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார்.தேவா இப்படத்திற்கு இசையமைத்தி... மேலும் பார்க்க