Shriya Saran: ``யார் இந்த முட்டாள்?" - ஆத்திரத்தில் கொந்தளித்த நடிகை ஸ்ரேயா; என்...
மாண்புமிகு பறை: ``ஆஸ்திரேலியாவில் என்னை அழைத்து கௌரவித்தது ஏன்?'' -இசையமைப்பாளர் தேவா சொன்ன விளக்கம்
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார்.
தேவா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று கவனம் ஈர்த்தது இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் (நவ.18) நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய தேவா, " என்னை ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் சபாநாயகர் அமரும் இடத்தில் உட்கார வைத்து கௌரவப்படுத்தி அனுப்பிச்சாங்க.
அது எதுக்குன்னா 10 வருடத்துக்கு முன்னாடி 25 கிராமிய இசைக்கலைஞர்கள் எல்லாரும் சேர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு போயிருந்தோம்.
அங்க ஒரு மாசம் இருந்து, பறை இசையை அங்குள்ளவர்களுக்கு நான் சொல்லிக்கொடுத்துவிட்டு வந்தேன்.
ஒரு தடவை மேடையில நான் பறை இசை நிகழ்ச்சி பண்ணும்போது அங்கிருந்த மேயர் மேடம், எம்பி எல்லாரும் மேடைக்கு வந்து எங்ககிட்ட இருந்த பறையை அவர்கள் வாங்கி வாசிச்சாங்க. ஆச்சரியமாக இருந்துச்சு.
அவர்கள் பறையை வாங்கி வாசிச்சது ரொம்ப பெருமையாவும் இருந்துச்சு.

நான் பறை இசைத்ததை பார்த்து தான் என்னை ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் கௌரவித்தார்கள்.
என்னுடைய பல பாடல்கள் கீதமாக மாறிருக்கு. அதேபோல இந்தப் படத்துல நான் இசையமைச்ச 'ஆதிசிவன் அடிச்ச பறையடா'பாட்டும் எங்கெல்லாம் ப்ரோகிராம் நடத்துறாங்களோ அங்கெல்லாம் ஒலிக்க வேண்டும்.
இந்தப் பாட்டையும் எல்லோரும் ஒரு கீதமாக மாத்தணும். அது தான் என்னுடைய லட்சியம். எல்லோரும் இந்தப் பறை இசையை மதிக்கணும்" என பேசியிருக்கிறார்.

















