செய்திகள் :

``என் பெயர், படத்துடன் போனில் மோசடி; அது நான் இல்லை'' - நடிகை ஸ்ரேயா எச்சரிக்கை

post image

தமிழ், தெலுங்கு உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தற்போது ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான தனது காதலனை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

அந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து விலகி இருந்த ஸ்ரேயா, இப்போது மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்.

தற்போது ஸ்ரேயாவின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களிடம் ஒரு மர்ம நபர் மோசடி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நடிகை ஸ்ரேயா சரண்
நடிகை ஸ்ரேயா சரண்

இது குறித்து 43 வயதாகும் ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “7676361162 என்ற எண்ணைப் பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் யாரோ ஒருவர் என்னைப் போல ஆள்மாறாட்டம் செய்து வருவதாகவும், எனது புகைப்படங்களைப் பயன்படுத்தி திரைப்படத் தொழில்துறையினரைத் தொடர்புகொண்டு என்னைப் போல நடித்து வருவதாகவும், அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாகக் கூறுவதாகவும் எனது கவனத்திற்கு வந்துள்ளது.

இதில் ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் நேரத்தை வீணாக்குவதை நிறுத்த வேண்டும். இந்த நடத்தை விசித்திரமான ஒன்றாகும். இந்த முட்டாள் யாராக இருந்தாலும் சரி, தயவுசெய்து மக்களுக்கு எழுதி நேரத்தை வீணடிப்பதை நிறுத்துங்கள். மக்களின் நேரத்தை வீணாக்குவதில் நான் வருத்தப்படுகிறேன். இது நான் அல்ல! இது எனது எண் அல்ல!

Shriya Saran|ஸ்ரேயா சரண்

ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த முட்டாள்தனமான நபர் நான் மதிக்கும் மற்றும் வேலை செய்ய விரும்பும் நபர்களை தொடர்பு கொள்கிறார்.

“இதை செய்து ஏன் உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள்? வேறொருவரைப் போல ஆள்மாறாட்டம் செய்வதற்கு பதில் ஒரு வாழ்க்கையைத் தொடங்குங்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் வெளியான மிராய் என்ற படத்தில் ஸ்ரேயா சரண் நடித்துள்ளார்.

Sathyajit Ray: சத்யஜித் ரே பற்றி சுரேஷ் ஜின்டால் எழுதிய புத்தகம் - இதன் தனித்துவம் என்ன?

ஏதோ ஒரு ஞானத்தையும், ஒரு திறப்பையும், பல புரிதல்களையும் நம்முள் விதைக்கும் வீரியம் புத்தகங்களுக்கு உண்டு. பலரின் வாழ்வை மாற்றிய புத்தகங்கள் உண்டு. ஒரு சினிமா ரசிகனாக, சினிமா பற்றிய புத்தகங்கள் எப்போது... மேலும் பார்க்க