மாண்புமிகு பறை: ``ஆஸ்திரேலியாவில் என்னை அழைத்து கௌரவித்தது ஏன்?'' -இசையமைப்பாளர்...
BB Tamil 9: "ரொம்ப உடைஞ்சிட்டேன்; என்னால இங்க சர்வைவ் பண்ண முடியல"- அழுது புலம்பும் ரம்யா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர்.
கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில் திவாகர் வெளியேற்றப்பட்டார்.
இந்த வாரம் 13 பேர் நாமினேஷனில் இடம் பெற்றிருக்கின்றனர்.

இந்த வாரம் சோறு, சோப்பு, மாப்பு என்ற பெயரில் டாஸ்க் நடக்கிறது. மூன்று அணிகளாக பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வருகின்றனர்.
இன்று வெளியான முதல் புரொமோவில் ஸ்டார் பெர்ஃபாமர், வொஸ்ட் பெர்ஃபாமர் யார்? என கேட்க ஸ்டார் பெர்ஃபாமர் கனி திரு, அமித் பார்கவ், பிரஜின் ஆகியோரை கூறினார்.

"பெரிசா என்டர்டெயின்ட்மென்ட் பண்ணி நாங்க பார்க்கல. வேலை செஞ்சும் நாங்க பார்க்கல" என ரம்யா விக்கல்ஸ் விக்ரமை வொஸ்ட் பெர்ஃபாமர் என சொன்னார். அதேபோல "என்டர்டெயின்ட்மென்ட்டா அவுங்க என்ன பண்ணாங்கன்னு எங்களுக்கும் தெரியல" என விக்கல்ஸ் விக்ரம் ரம்யாவை சொல்ல ரம்யா அழுதார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது புரொமோவில், " விக்ரம் என்டர்டெயின்மென்ட் பண்ணி நான் பார்க்கவே இல்ல. நான் கடினமா உழைச்சிருக்கேன். என்னால முடியல. நான் ரொம்ப உடைஞ்சிட்டேன்.

என்னால இதுக்கு அப்புறம் இங்க சர்வைவ் பண்ண முடியாது. ஒவ்வொருத்தரும் அவுங்க வார்த்தையால குத்துறாங்க. அதுக்கு அவுங்க சொல்ற காரணத்தை என்னால ஏத்துக்க முடியல" என ரம்யா அழுது புலம்புகிறார்.
















