செய்திகள் :

`40 வழக்குகளில் தொடர்பு; தேடப்படும் முகமுடி கொள்ளையர்கள்’ - போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நால்வழிச்சாலையில் மேற்கு காவல் நிலைய போலீஸார், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரினை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் இருந்த 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சாந்தகுமார், மதுரை மாவட்டம் நாகமலையைச் சேர்ந்த சிவகுமார் என்பது தெரிய வந்தது.

திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார்

இருவரும் திருட்டு, கொலை மிரட்டல், வழிப்பறி உள்ளிட்ட 40 –க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள் எனத் தெரிய வந்தது. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீஸாரிடம் பேசினோம்,

“முதுகுளத்தூரைச் சேர்ந்த சாந்தகுமார் தற்போது மதுரையில் குடியிருந்து வருகிறார். இவரது நண்பர்தான் சிவகுமார்.  விருதுநகர், நெல்லை, சிவகங்கை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

காரில் சென்று வீடுகளை நோட்டமிடும் இவர்கள், ஆட்கள் இல்லாதவீடுகளை குறிவைத்து இரவு நேரங்களில் சென்று கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளில் கொள்ளையடிக்கும் போது சி.சி.டி.வி கேமராக்களில் முகம் பதிவாகாமல் இருப்பதற்காக முகமுடி அணிந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். தடயவியல் சோதனையில் சிக்காமல் இருப்பதற்காக கையுறை அணிந்து கொள்கின்றனர். இவர்கள் இருவரையும் பல்வேறு காவல் நிலைய போலீஸார் தேடி வருகின்றனர். தற்போது கோவில்பட்டியில் சிக்கிக் கொண்டனர்.

மேற்கு காவல் நிலையம்

இருவரிடமிருந்தும் கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார், கொள்ளைக்கு பயன்படுத்திய இரும்பு பொருட்கள், நகைகள், கையுறைகள், முகமுடிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகை, பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் ஆட்களில்லாத வீடுகளுக்கு செல்லும் இவர்கள், அங்கு எதுவும் சிக்கவில்லை என்றால், ஆத்திரத்தில் அந்த வீட்டில் உள்ள டி.வி, பிரிட்ஜ், பீரோ உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு சென்று விடுவார்களாம். தங்களுக்கு எதுவும் சிக்காவிட்டாலும் வீட்டின் உரிமையாளருக்கு பொருள் சேதம் ஏற்படுத்திவிட்டு சென்றுவிடுவது விசாரணையில் தெரிய வந்துள்ளது” என்றனர்.

குமரி: அரசு நிலத்தை பங்குபோட்டு கொடுத்தாரா அதிமுக பிரமுகர்? - தாசில்தார் புகாரால் வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவுக்குட்பட்ட சிறமடம் பகுதியில் சுமார் 3 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் அமைந்துள்ளது. அங்கு மின்சார சுடுகாடு அமைக்க அரசு சில மாதங்களுக்கு முன்பு முயன்றது. அதற்கு அப்பக... மேலும் பார்க்க

US: `சல்மான் கானைக் கொலை செய்ய முயன்ற அன்மோல் பிஷ்னோய்' - இன்று இந்தியாவுக்கு நாடு கடத்தல்

அமெரிக்காவிலிருந்து புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்தவர்கள் இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களை அவரவர் நாட்டிற்கு கட்டாயமாக நாடு கடத்துவது வழக்கமாக ந... மேலும் பார்க்க

விருதுநகர்: போனுக்கு வந்த லிங்க்; ஒரே க்ளிக்கில் ரூ.10 லட்சத்தை இழந்த பாஜக நிர்வாகி!

விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் ராமதாஸ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மொபைலுக்கு கடந்த 1ம் தேதி பி.எம் கிசான் லிங்க் வந்துள்ளது. அவர் தனக்கு வந்த... மேலும் பார்க்க

வாணியம்பாடி: பள்ளி வேனில் சிக்கி குழந்தை பலி; தாயின் கண்ணெதிரே நடந்த சோகம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள காவலூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவரின் மனைவி திலகவதி. இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகளும், ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் இருந்தது. பெண் பிள... மேலும் பார்க்க

முதலிரவில் காதலனுடன் சென்ற பெண்; மீண்டும் ஒப்படைக்க வந்தபோது உறவினர்கள் கல்வீச்சு - நடந்தது என்ன?

நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு களக்காட்டில் உள்ள ஒரு தனியார் கல்வியியல் கல்லூரியில் பி.எட் படித்து வந்தார். அதே கல்லூரியில் களக்காடு அருகேயுள்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `தவறுதலாக விடுவிக்கப்பட்ட சிறைக்கைதி; மறுநாளே மீண்டும் கைது!' - தவறு நடந்தது எங்கே?

தூத்துக்குடி, கிருபாநகரைச் சேர்ந்தவர் ராகுல். இவர் மீது புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டது. போக்சோ வழக்கில் ராகுலை கடந்த மார்ச் 9-ம் தேதி போலீஸார் கைது செய்... மேலும் பார்க்க