செய்திகள் :

``நடிகர் விஜய் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துடன் ஒன்றுபட்டுள்ளார்' - அப்பாவு

post image

நெல்லையில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்திற்கு எதிராக விஜய் போராட வேண்டுமென்றால் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்க வேண்டும்.

அதை விடுத்து எஸ்.ஐ.ஆர் என்ற பெயரில் மாநில அரசுக்கு எதிராகப் போராடுவது என்பது வெறும் கண்துடைப்பு. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை மனதில் வைத்துக்கொண்டு போராடுபவர்களை மக்கள் நம்பவில்லை.

அப்பாவு

எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டம் எனக்கூறிவிட்டு எஸ்.ஐ.ஆருக்கு எதிராக விஜய், ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தமிழக அரசுக்கு எதிராகவே பேசியிருக்கிறார். எஸ்.ஐ.ஆர்-ஐ பார்த்து முதல்வருக்கு எந்த பயமும் கிடையாது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் தினந்தோறும் 50 வாக்காளர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்று வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கொடுக்கலாம் என தேர்தல் ஆணையமே கூறியுள்ளது.

இது தமிழக வெற்றிக்கழகத்திற்கு தெரியாதா? ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துடன் விஜய் ஒன்றுபட்டுள்ளார். எனவே அவர்கள் இருவரும் ஒன்றாக இணைவர். எஸ்.ஐ.ஆருக்கு எதிராக வருவாய்த்துறை அலுவலர்களை தூண்டிவிடும் பழக்கம் தி.மு.க-வுக்கு கிடையாது. பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர்.

அப்பாவு

மத்திய அரசு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்திய உடனே மாநில அரசும் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய நிதியை வழங்கினாலே ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இங்கு செயல்படுத்த முடியும்.” என்றார். 

``குண்டும் குழியுமான சேலம் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு எப்போது?''- மக்களின் அவசரக் கோரிக்கை

சேலம் மாவட்டத்தில் இருந்து பெங்களூருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் அண்மையில் ஆர்.சி.செட்டிப்பட்டி மற்றும் காமலாபுரம் சாலை பகுதிகளில் என இரண்டு மேம்பாலங்கள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப... மேலும் பார்க்க

'முதல்வர் பயணித்த வெளிநாடுகள் 7; ஈர்க்கப்பட்ட முதலீடு 0’ - அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டும் அன்புமணி

தமிழக அரசின் தொழில் முதலீடுகள் சார்ந்து கேள்வி கேட்டு, 'திமுக அரசின் பொய் முதலீடுகள்' என்ற பெயரில் பா.ம.க தலைவர் அன்புமணி ஆவணம் ஒன்றை இன்று சென்னையில் வெளியிட்டிருந்தார்.அன்புமணிஅந்த ஆவணத்தை வெளியிட்ட... மேலும் பார்க்க

இராமேஸ்வரம்: `இந்த அவல நிலைக்கு யார் பொறுப்பு?’- பள்ளி மாணவி குத்தி கொல்லப்பட்ட விவகாரத்தில் கண்டனம்

இராமேஸ்வரத்தில் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காதலிக்க மறுத்ததால் இளைஞர் கொலை செய்ததாகக் கூறப... மேலும் பார்க்க

``பாஜகவுக்கு சாமரம் வீச அதிமுக SIR-ஐ ஆதரிக்கிறது'' - திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ

"2026-ல் முறையற்ற முறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டால், நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்" என திமுக சட்டத்துறைச் செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ சென்னையில் நேற்று (நவ.18) நட... மேலும் பார்க்க