செய்திகள் :

"என் முதல் கார், நண்பன் கொடுத்த பரிசு" - கார் பரிசளித்த பிரதீப்புக்கு நன்றி சொன்ன நண்பர்

post image

இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் அவரது முதல் படத்தில் இருந்து இணை இயக்குநராக பணியாற்றி அவர் கூடவே இருக்கும் நண்பருக்கு கார் ஒன்றை பரிசளித்திருந்தார்.

காரை பரிசளித்த பிறகு பேசியிருந்த பிரதீப் ரங்கநாதன், "உங்களோட லாயல்டிக்கு என்னோட ஒரு சின்ன கிஃப்ட் இது. நல்ல வேலை செய்றீங்க. இது ஒரு தொடக்கம் தான்.

கார் பரிசளித்த நண்பருடன், பிரதீப் ரங்கநாதன்
கார் பரிசளித்த நண்பருடன், பிரதீப் ரங்கநாதன்

இன்னும் நீங்க நிறையப் பயணிக்கணும். எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருந்தன.

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனுக்கு நன்றி தெரிவித்து அந்த நண்பர் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " இது என்னுடைய முதல் கார்... என் நண்பன் கொடுத்த பரிசு. ஒரு சாதாரண கிஃப்ட் மட்டும் இல்ல.

நம்மிடையே இருக்கும் நம்பிக்கை மற்றும் நாம் இருவரும் பகிர்ந்த பயணத்துக்கான ஒரு அழகான சின்னம்.

இந்த அழகான நினைவைக் கொடுத்து, எப்போதும் என்மேல் நம்பிக்கை வைத்திருக்கும் பிரதீப் அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி.
லவ் யூ அண்ணா!" என பதிவிட்டிருக்கிறார்.

`உன்னை ஆழமாக நேசிக்கிறேன்' - நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா தனது இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து வி... மேலும் பார்க்க

Roja: " 'என் மகனை காப்பாத்துங்க'னு டாக்டர்கிட்ட சொல்லிட்டே இருந்தேன்!" - பர்சனல் பகிரும் ரோஜா!

90-களில் கோலிவுட், டோலிவுட் என பிஸியான நடிகையாக வலம் வந்தார் ரோஜா. 12 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் திரைத்துறைக்கு வந்திருக்கிறார். ஆந்திரா மாநில அரசியலில் சுழன்று இயங்கி வந்தவர் அறிமுக இய... மேலும் பார்க்க

Kayadu Lohar: ``என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள்?” - நடிகை கயாடு லோஹர் வேதனை

2021ம் ஆண்டு வெளியான 'முகில்பேட்டே' என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கயாடு லோஹர். அதன் பிறகு 'பதோன்பதம் நூட்டாண்டு' என்ற மலையாள படத்திலும், 'அல்லூரி' என்ற தெலுங்கு படத்திலும், '... மேலும் பார்க்க

Friends: `இந்தப் படத்தில் ஹீரோ யார் என்றே தெரியாது!’ - இயக்குநர் பேரரசு

இயக்குநர் சித்திக் இயக்கத்தில், விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி, ரமேஷ் கண்ணா, விஜயலட்சுமி ஆகியோர் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃப்ரண்ட்ஸ்'. இந்தப்படம் வரும் நவம்பர் 21ம் தேதி, 4K தரத்தில... மேலும் பார்க்க

"உங்க லாயல்டிக்கு ஒரு சின்ன கிஃப்ட்"- இணை இயக்குநருக்கு கார் பரிசளித்த நடிகர் பிரதீப் ரங்கநாதன்

தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் 'கோமாளி' படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். இதனைத் தொடர்ந்து 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் அவரே ஹீரோவாக நடித்திருந்தார். இந்... மேலும் பார்க்க

"`சாவா' பிரசார படம்னு தெரியும்; அதான் நடிக்கல" - 'காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை விமர்சித்த கிஷோர்

ஹீரோ, வில்லன், நேர்மறையான விஷயங்களை நிகழ்த்தக்கூடிய குணச்சித்திர கதாபாத்திரங்கள் என அனைத்திற்கும் சரியாகப் பொருந்திப்போகக்கூடியவர் நடிகர் கிஷோர். தனக்குக் கொடுக்கப்படும் அத்தனை கதாபாத்திரங்களையும் பக்... மேலும் பார்க்க