கார்த்திகையில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்; ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒலித்த சரண...
"உங்க லாயல்டிக்கு ஒரு சின்ன கிஃப்ட்"- இணை இயக்குநருக்கு கார் பரிசளித்த நடிகர் பிரதீப் ரங்கநாதன்
தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் 'கோமாளி' படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் அவரே ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
அடுத்து அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான 'டிராகன்' படத்தில் நடித்திருந்தார். அப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது.

சமீபத்தில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் 'டியூட்' படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்.ஐ.கே' படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் அவரது முதல் படத்தில் இருந்து இணை இயக்குநராக பணியாற்றி அவர் கூடவே இருக்கும் நண்பருக்கு கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் காரை பரிசளித்த பிறகு பேசியிருக்கும் பிரதீப் ரங்கநாதன், "உங்களோட லாயல்டிக்கு என்னோட ஒரு சின்ன கிஃப்ட் இது. நல்ல வேலை செய்றீங்க. இது ஒரு தொடக்கம் தான். இன்னும் நீங்க நிறையப் பயணிக்கணும். எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.













