செய்திகள் :

முதலிரவில் காதலனுடன் சென்ற பெண்; மீண்டும் ஒப்படைக்க வந்தபோது உறவினர்கள் கல்வீச்சு - நடந்தது என்ன?

post image

நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு களக்காட்டில் உள்ள ஒரு தனியார் கல்வியியல் கல்லூரியில் பி.எட் படித்து வந்தார். அதே கல்லூரியில் களக்காடு அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் வேலை பார்த்து வந்தார். அந்த பெண்ணுக்கும் இளைஞருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கடந்த மாதம் 31-ம் தேதி அந்த பெண்ணுக்கும், வேறு ஒருவருக்கும் திருமணம் நடத்தப்பட்டது.

களக்காடு காவல் நிலையம்

ஆனால், திருமணம் நடந்த அன்று முதலிரவில் அந்தப்பெண், கணவருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி, காதலனுடன் காரில் நெல்லைக்கு சென்று விட்டார். புதுப்பெண் மாயமானதால் அவரது கணவர் பெண் வீட்டாருக்கு தகவல் கூறியுள்ளனர். இது குறித்து பெண்ணின் சகோதரர் களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.    

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வந்தனர். இதனிடையே அந்த இளைஞரின் அண்ணன்,  திருமணமான புதுப்பெண்ணை அழைத்து வந்ததை அறிந்து இது தவறு என தனது தம்பிக்கு அறிவுரை கூறியுள்ளார். அதே நேரத்தில் திருமணமான நிலையில், வீட்டை விட்டு வெளியே வந்தது தவறு என, அந்த பெண்ணிற்கும் அறிவுரை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த புதுப்பெண், தன்னை தனது தாயார் வீட்டில் விட்டுவிடும்படி கூறியுள்ளார்.

களக்காடு காவல் நிலையம்

இதனையடுத்து அந்த பெண்ணை அந்த இளைஞர் மற்றும் அவரது அண்ணன், களக்காட்டில் உள்ள அவரது வீட்டில் கொண்டு விட்டுள்ளனர். அப்போது தாயார் வீட்டில் இருந்த அந்த பெண்ணின் சகோதரர் உட்பட உறவினர்கள் 4 பேர் இளைஞர் வந்த காரின் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனர். அவர்கள் மீது கற்களையும் வீசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் அந்த பெண்ணின் சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி: `தவறுதலாக விடுவிக்கப்பட்ட சிறைக்கைதி; மறுநாளே மீண்டும் கைது!' - தவறு நடந்தது எங்கே?

தூத்துக்குடி, கிருபாநகரைச் சேர்ந்தவர் ராகுல். இவர் மீது புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டது. போக்சோ வழக்கில் ராகுலை கடந்த மார்ச் 9-ம் தேதி போலீஸார் கைது செய்... மேலும் பார்க்க

திருப்பூர்: கர்நாடக `நந்தினி’ நிறுவனம் பெயரில் கலப்பட நெய் - ஒரு வருடமாக இயங்கி வந்த போலி ஆலை

கர்நாடக மாநில கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினரால் தயாரிக்கப்படும் நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் `நந்தினி’ என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பெயரில் கலப்பட நெய்... மேலும் பார்க்க

கடலூர்: அக்கா மகளை மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமை; தாய்மாமன் சிக்கியது எப்படி?

கடலூர் மாவட்டம், வைலாமூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்க... மேலும் பார்க்க

டிஜிட்டல் கைது: "மகனின் திருமணம் நல்லபடியாக நடக்கணும்னுதான்" - பெங்களூரு பெண்ணிடம் ரூ.32 கோடி மோசடி

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் முதியவர்களை ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. கைது செய்ய வீட்டிற்கு போலீஸாரை அனுப்புவோம் என்று பெண்களை மிர... மேலும் பார்க்க

சேலம்: திருமணம் தாண்டிய உறவு விவகாரத்தில் கொலை - 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள உம்பிளிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி(60). கடந்த 2000-ம் ஆண்டு நல்லதம்பிக்கு 35 வயது இருந்தபோது, உம்பிளிக்கம்பட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: பட்டியல் சமூக மாணவரை தாக்கிய மாற்று சமூக மாணவர்கள் - அரசு விடுதியில் அரங்கேறிய அவலம்

ராமநாதபுரம் அம்மா பூங்கா பகுதியில் மாணவர்களுக்கான அரசு சமூக விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் பல்வேறு சமுதாயத்தினை சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகி... மேலும் பார்க்க