செய்திகள் :

ராமநாதபுரம்: பட்டியல் சமூக மாணவரை தாக்கிய மாற்று சமூக மாணவர்கள் - அரசு விடுதியில் அரங்கேறிய அவலம்

post image

ராமநாதபுரம் அம்மா பூங்கா பகுதியில் மாணவர்களுக்கான அரசு சமூக விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் பல்வேறு சமுதாயத்தினை சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி விடுதியில் தங்கியுள்ள பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த மாணவர் ஒருவரை, மற்ற சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். இது தொடர்பான காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் தாக்குதல் சம்பவம் நேற்று சில செய்தி ஊடகங்களில் வெளியானது. இதனால் ராமநாதபுரத்தில் பரபரப்பு நிலவியது.

பாதிக்கப்பட்ட மாணவர்

இதையடுத்து இச்சம்பவம் குறித்து மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் உத்தரவிட்டார். மேலும் பட்டியல் சமுதாய மாணவர் மீது தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை விடுதியில் இருந்து நீக்கம் செய்தும் உத்தரவிட்டார்.

தாக்குதலுக்குள்ளாகும் மாணவர்

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே வன்முறை கலாசாரம் பரவி வருவதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், அரசு மாணவர் விடுதிக்குள்ளேயே அது அரங்கேறியிருப்பது அச்சத்ததை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நடந்த போது அதனை தடுத்திருக்க வேண்டிய விடுதி காப்பாளர் உள்ளிட்ட பணியாளர்கள் எங்கு போனார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. எனவே இது தொடர்பாகவும் விசாரணை நடத்தி அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவரின் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம்: திருமணம் தாண்டிய உறவு விவகாரத்தில் கொலை - 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள உம்பிளிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி(60). கடந்த 2000-ம் ஆண்டு நல்லதம்பிக்கு 35 வயது இருந்தபோது, உம்பிளிக்கம்பட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்... மேலும் பார்க்க

``டெல்லியில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதல்'' - NIA விசாரணை என்ன சொல்கிறது?

டெல்லியில் கடந்த வாரம் செங்கோட்டை அருகில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பில், வெடிகுண்டு இருந்த காரை ஓட்டி வந்த டாக்டர் உமர் உல் நப... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: ``திருமணம் நடைபெற 16 நாள் குழந்தையை பலியிட்ட 4 பெண்கள்'' - பெற்றோர்கள் அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் பூனம்ராம். இவரது மனைவி சுமன். சுமனுக்கு அங்குள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்திருந்தது.ஆனால், பூனத்தின் சகோதரிகள் ரமேஷ்வரி, மம்தா, கீதா, மஞ்சு... மேலும் பார்க்க

காங்கேயம்: சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை; போலி வார்டன் போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவியர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்குப் பின்புறம் தமிழக அரசின்... மேலும் பார்க்க

`10 நிமிடம் தாமதம்' - ஆசிரியர் கொடுத்த `100 முறை சிட்-அப்' தண்டனையால் உயிரிழந்த மாணவி

இப்போது பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் வேறு வழிகளில் தண்டனை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். மும்பை வசாயில் பகுதியில் அது போன்று தண்டனை பெற்ற ஒர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் கொலை வழக்கு: `போலீஸாரின் கூட்டுச்சதி பிரிவையும் சேர்க்க வேண்டும்’ - சிபிஐ தரப்பு பதில்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 22.06.2020-ல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர... மேலும் பார்க்க