செய்திகள் :

BB Tamil 9: "வொஸ்ட் பெர்ஃபாமர் அவுங்க தான்" - அழுத ரம்யா

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர்.

கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில் கடந்த வாரம் திவாகர் வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் 13 பேர் நாமினேஷனில் இடம் பெற்றிருக்கின்றனர்.

திவாகர்
திவாகர்

இந்த வாரம் சோறு, சோப்பு, மாஃபு என்ற பெயரில் டாஸ்க் நடக்கிறது. மூன்று அணிகளாக பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரொமோவில் ஸ்டார் பெர்ஃபாமர், வொஸ்ட் பெர்ஃபாமர் யார்? என கேட்க ஸ்டார் பெர்ஃபாமர் கனி திரு, அமித் பார்கவ், பிரஜின் ஆகியோரை சொல்கின்றனர்.

 BB Tamil 9
BB Tamil 9

"பெரிசா என்டர்டெயின்ட்மென்ட் பண்ணி நாங்க பார்க்கல. வேலை செஞ்சும் நாங்க பார்க்கல" என ரம்யா விக்கல்ஸ் விக்ரமை வொஸ்ட் பெர்ஃபாமர் என சொல்கிறார். அதேபோல "என்டர்டெயின்ட்மென்ட்டா அவுங்க என்ன பண்ணாங்கன்னு எங்களுக்கும் தெரியல" என விக்கல்ஸ் விக்ரம் ரம்யாவை சொல்கிறார். தொடர்ந்து ரம்யா அழுவதால புரோமோ முடிகிறது.

Bigg boss Tamil 9: `அடக்கடவுளே! சாதி பத்தியெல்லாம் நான் பேசவே இல்ல' - `வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர்

`பிக்பாஸ் தமிழ் சீசன் 9'ல் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் திவாகர். `வாட்டர்மெலன் ஸ்டார்' என்கிற அடைமொழியுடன் அந்த வீட்டிற்குள் சென்றிருந்தார் திவாகர். சமூகவலைதளப் பக்கங்களில் அவர் குறித்த பல விமர்சனங்... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 43: ‘திவாகர் போன பிறகுதான் தெளிவா இருக்கேன்’ - பாரு அதிரடி; நாமினேஷன் சடங்கு

‘வந்தவளும் சரியில்ல.. வாய்ச்சவளும் சரியில்ல’ என்று ஒரு திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சியில் புலம்புவார் ஜனகராஜ். அதைப் போல, பழைய போட்டியாளர்களும் சரியில்லை, புதிதாக வைல்ட் கார்டில் வந்தவர்களும் சரியி... மேலும் பார்க்க

'ஹீரோவா வேற யாரும் கிடைக்கலயா'னு கேட்டிருக்காங்க’- 1000 எபிசோடு மகிழ்ச்சியில் 'ஆனந்த ராகம்' அழகப்பன்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'ஆனந்தராகம்' சீரியல் இன்று ஆயிரமாவது எபிசோடை எட்டியுள்ளது.வாழ்த்துச் சொல்லி தொடரின் ஹீரோ அழகப்பனிடம் பேசினோம்.''காரைக்குடிப் பக்கத்துல இருக்கிற கொத்தமங்கலம் எங்க ஊரு. நா... மேலும் பார்க்க

பாண்டியன் ஸ்டோர்ஸ்: "அந்த இரண்டு திறமையும் இருக்க நிரோஷா ஸ்பெஷலான பொண்ணு" - பூர்ணிமா பாக்யராஜ்

சிறந்த சின்னத்திரை கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா கடந்த அக்டோபர் 12ம் தேதி சென்னையில் நடைபெற்றது.இதில், 2024-ம் ஆண்டின் `ஃபேவரைட் மாமியார் மருமகள்’ விருத... மேலும் பார்க்க