Sheikh Hasina: வன்முறை டு மரண தண்டனை - வங்கதேச தந்தையின் மகளுக்கு நடந்தது என்ன?
விருதுநகர்: போனுக்கு வந்த லிங்க்; ஒரே க்ளிக்கில் ரூ.10 லட்சத்தை இழந்த பாஜக நிர்வாகி!
விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் ராமதாஸ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மொபைலுக்கு கடந்த 1ம் தேதி பி.எம் கிசான் லிங்க் வந்துள்ளது. அவர் தனக்கு வந்த லிங்கை ஓபன் செய்து பார்த்துள்ளார். இதனையடுத்து 5ம் தேதி இரவு 9 மணிக்கு ரூ. 5 லட்சம், அடுத்து இரண்டு நிமிடத்தில் ரூ. 4 லட்சம், அடுத்து இரண்டு நிமிடத்தில் ரூ.1 லட்சம் என மொத்தம் ஆறு நிமிடத்திற்குள் வங்கிக் கணக்கில் இருந்த 10 லட்சம் ரூபாய் ஆன்லைன் வாயிலாக எடுக்கப்பட்டுள்ளது.

மொபைல் எண்ணுக்கு பணம் எடுத்ததற்கான குறுஞ்செய்தியும் வந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராமதாஸ் மறுநாள் 6-ம் தேதி காலையில் வங்கிக்கு சென்று வங்கி மேலாளரிடம் புகார் கொடுத்துள்ளார். பின்னர் விருதுநகர் மாவட்ட சைபர் கிரரம் போலீசில் புகார் கொடுத்தார். அப்புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆன்லைன் வாயிலாக பணத்தை எடுத்த நபர்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் மூன்று லட்சம் ரூபாயை எடுக்க முடியாதபடி லாக் செய்தனர். ஆன்லைன் மோசடியில் பீகார் கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.


















