செய்திகள் :

சேலம்: குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் வன உயிரினங்களுக்கான மருத்துவமனை? - என்ன சிறப்பு?

post image

சேலம் மாவட்டம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் சுமார் 70 இலட்சம் செலவில் வன உயிரினங்களுக்கான சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது என்ற தகவல் கேட்டு குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு சென்றோம்.

தற்போது கட்டப்பட்டுள்ள வன உயிரினங்களுக்கான சிறப்பு மருத்துவமனை குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவின் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு சீட்டு பெற்று பார்வையாளராக உள்ளே சென்றோம்.

குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா
குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா

மருத்துவமனையில் என்ன சிறப்பு?

இது பிரத்யேகமாக குரும்பப்பட்டி வன உயிரினங்களுக்காக கட்டப்பட்டது என்றனர்.

இந்த உயிரியல் பூங்காவில் எத்தனை உயிரினங்கள் உள்ளன? என்று வனச்சரகர் அலுவலரிடம் கேட்ட போது, 21 விலங்கு மற்றும் பறவை இனங்கள் உட்பட 307 உயிரினங்கள் உள்ளதாக குறிப்பிட்டார். கடமான், புள்ளிமான் மற்றும் முதலை போன்ற உயிரினங்கள் உள்ளன என்றார்.

மருத்துவமனையானது உயிரினங்களுக்கான மருத்துவ வசதி கொண்ட கூண்டுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் பணிகள் தொடங்கி விட்டதா?

ஆம். ஆகஸ்ட் மாதம் முதல் ஒரு விலங்கின மருத்துவர் நியமனம் செய்யப்பட்டு, அடிப்படையான அனைத்து மருத்துவப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

ஆனால் மேம்பட்ட மருத்துவ வசதிகளுக்கான தேவை உள்ளதால், அதற்கான மருத்துவ உபகரணங்களின் தேவையும் எழுந்துள்ளது.

குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா
குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா

எனவே குரும்பப்பட்டி வன உயிரினங்கள் மருத்துவமனை இன்னும் சிறப்பான முறையில் செயல்பட, சி.எஸ்.ஆர் எனப்படும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியை எதிர்நோக்கி இருப்பதாக வனசரகர் குறிப்பிடுகிறார்.

அது என்ன சி.எஸ்.ஆர் என்றால், நிறுவனங்கள் தங்களின் லாபத்தில் குறைந்தபட்சம் 2% சமூக நலனுக்கு செலவிட வேண்டும் என சட்டம் கூறுகிறது. அதன் அடிப்படையில், இந்த உயிரியல் பூங்கா மருத்துவமனை சி.எஸ்.ஆர் நிதியை எதிர்நோக்கி சிறப்பான பணிகளை செய்ய காத்திருக்கிறது.

சிங்கம், புலி போன்ற விலங்கினங்கள் வருவதாக ஒரு தகவல் கேள்விப்பட்டோம்! இதுகுறித்து வனசரகரிடம் கேட்ட போது,

அது முன்மொழிவு நிலையில் உள்ளதாகவும், வன உயிரின பாதுகாப்பு சட்டம், 1972 படி டெல்லி மத்திய வன உயிரினங்கள் ஆணையம் அனுமதி பெற்றவுடன் அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா
குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா

மேலும் இதுகுறித்து பேசும்போது, வன உயிரினங்கள் தத்தெடுப்பு திட்டம் இங்கு உள்ளதாகவும், அதன் படி பொதுமக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப விலங்கினங்களை 1 நாள் முதல் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப, உயிரியல் பூங்கா விதிமுறைகளுக்குட்பட்டு தத்தெடுத்து, அதற்கான அட்டவணையிடப்பட்ட தொகையை செலுத்தி, பூங்காவின் உள்ளேயே உயிரினங்களை பராமரிக்க தங்களின் பங்களிப்பை அளிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் நன்கொடை தரலாமா?

தாராளமாக பொதுமக்கள், பிற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் நன்கொடைகள் அல்லது ஏதேனும் ஒரு பணியையோ செய்து தரலாம் என்று வனசரகர் அழைப்பு விடுக்கிறார். மக்களின் பங்களிப்போடு பூங்கா மற்றும் மருத்துவமனை சிறந்து விளங்க நாமும் பங்களிப்போம்.

மகுடி ஊதினால் பாம்பு படமெடுத்து ஆடுமா? உண்மை என்ன? - அறிவியல் சொல்வது இதுதான்!

பாம்பு மகுடி இசைக்கு மயங்கி ஆடும் காட்சியை நாம் பல திரைப்படங்களிலும், நிஜ வாழ்க்கையிலும் பார்த்திருப்போம். ஆனால், பாம்புகளால் உண்மையிலேயே மனிதர்களைப் போல ஒலியைக் கேட்க முடியுமா என்ற கேள்விக்கு அறிவியல... மேலும் பார்க்க

நஞ்சுள்ள பாம்புகள் எவை? பாம்பு கடித்தால் மரணத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? - நிபுணர்கள் விளக்கம்

மழைக்காலத்தில் மக்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளில் ஒன்று பாம்புகளின் தொல்லை. இருசக்கர வாகனம், கார், குளிர்சாதனப் பெட்டி போன்ற பல இடங்களில் சென்று பதுங்கி இருப்பதாக பல செய்திகளை நாள்தோறும் கேட்க நேரிடு... மேலும் பார்க்க