"திமுக தொழில்த்துறை முதலீடுகளில் ஊழல் பொய்" - பாமக அன்புமணி அடுக்கும் குற்றச்சாட...
UP: "அதனாலதான் கடிச்சு துப்பினேன்" - பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்று நாக்கைப் பறிகொடுத்த நபர்
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகில் உள்ள தரியாப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சுமேதா(20) என்ற பெண் மண் அடுப்பு செய்வதற்குத் தேவையான மண் எடுப்பதற்காக அங்குள்ள கால்வாய் ஒன்றுக்குச் சென்றார்.
அவர் அங்கு மண் எடுத்துக்கொண்டிருந்தபோது ராஜ் என்ற விவசாயி அங்கு வந்தார். அவர் சுமேதாவிடம் பேச்சு கொடுத்தார். அப்படி பேசிக்கொண்டிருந்தபோது திடீரென பின்புறமாக நின்று கொண்டு அப்பெண்ணின் கையைப் பிடித்து முத்தம் கொடுத்தார்.
அவரை எதிர்த்து அப்பெண் போராடினார். ஆனால் ராஜ் அந்த பெண்ணை இறுக கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தம் கொடுத்தார். இதனால் அப்பெண் அந்த நபரின் நாக்கை கடித்து துப்பிவிட்டார்.
இது குறித்து அப்பெண் கூறுகையில், ''நான் மண் எடுத்துக்கொண்டிருந்தேன். அந்நேரம் அங்கு வந்த ராஜ் என்னுடன் பேச்சு கொடுத்துக்கொண்டே என்னைப் பின்புறமாகக் கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தம் கொடுக்க ஆரம்பித்தார். அவரது நாக்கு எனது வாய்க்குள் வந்தது. நான் அவரைப் பிடித்து தள்ள முயன்றேன்.

ஆனால் அவர் இறுக்கிப் பிடித்ததால் என்னால் அவரைத் தள்ளிவிட முடியவில்லை. இதனால் பயத்தில் எனது வாய்க்குள் வந்த அவரின் நாக்கை அழுத்தமாகக் கடித்துவிட்டேன். உடனே அவர் வாயை எடுத்துக்கொண்டார்.
அவரது நாக்கு கீழே விழுந்தது. இதனால் நான் வீட்டிற்கு ஓடி வந்து எனது தாயாரிடம் தெரிவித்தேன். அவருடன் சென்று இது குறித்து போலீஸில் புகார் செய்தோம்'' என்று தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நாக்கு கடிபட்ட நபர் உடனே கீழே விழுந்த நாக்கை எடுத்துக்கொண்டு போலீஸ் நிலையத்திற்குச் சென்றார். அங்கு தன்னை அப்பெண்ணும், அவரது சகோதரரும் சேர்ந்து அடித்து நாக்கை வெட்டிவிட்டதாகக் குறிப்பிட்டார். அவரை போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். ஆனால் அவரால் இனி சரியாகப் பேச முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரால் சத்தம் எழுப்ப முடியும். ஆனால் இனி வாழ்க்கையில் சரியாகப் பேசவே முடியாது. ராஜ் குடும்பத்தினர் அப்பெண்ணின் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

















