செய்திகள் :

வெங்காயங்களில் கருப்பு பூஞ்சை: கழுவினால் போதுமா? தோலை நீக்கிவிட வேண்டுமா? எது சரி?

post image

இப்போது நாம் வாங்கும் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டிலும் கருப்பு பூஞ்சைகளை அதிகம் பார்க்க முடிகிறது.

சிலர் அந்தப் பூஞ்சையை கழுவி விட்டு வெங்காயத்தை பயன்படுத்துகிறோம்... சிலர் அந்தப் பூஞ்சை இருக்கும் தோலை நீக்கிவிட்டு பயன்படுத்துகிறோம்.

ஆனால், இதில் எது சரி என்று யோசித்திருக்கிறோமா? ஏன் இந்தப் பூஞ்சை ஏற்படுகிறது? இந்தப் பூஞ்சை வந்த வெங்காயத்தை சாப்பிடலாமா? என்பதை விளக்குகிறார் நுண்ணுயிரியியல் பேராசிரியர் மற்றும் முனைவர் சுரேஷ்.
நுண்ணுயிரியியல் பேராசிரியர் மற்றும் முனைவர் சுரேஷ்
நுண்ணுயிரியியல் பேராசிரியர் மற்றும் முனைவர் சுரேஷ்

வெங்காயங்களில் பூஞ்சை ஏற்படுவது எப்படி?

"இதற்கு மிக முக்கியமான இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று, வெங்காயத்தின் தோல் மீது ஏதாவது அடி பட்டிருந்தால் இந்தப் பூஞ்சை வரும்.

இன்னொன்று, வெங்காயத்தை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும்போதோ, எங்கேயாவது சேமித்து வைக்கும்போதோ, ஈரப்பதம் அதிகமானால், பூஞ்சை ஏற்படும்.

இந்தப் பூஞ்சை பார்ப்பதற்கு கருப்பு நிறுத்திலும், பவுடர் போன்ற தோற்றத்திலும் தான் இருக்கும். இதற்கு 'கருப்பு பூஞ்சை' என்று பெயர். ஆங்கிலத்தில், 'Aspergillus Niger' என்று கூறுவார்கள்.

இந்தப் பூஞ்சை ஏற்படுவதை தடுக்க முடியுமா?

இதை தடுப்பதற்கு என தனியாக எந்தவொரு பூஞ்சைக்கொல்லியும் இல்லை.

அதனால், இந்தப் பூஞ்சை ஏற்படாமல் தடுக்க, மேலும் பெரிதாக பரவிடாமல் தடுக்க, வெங்காயங்களை நன்கு காற்றோட்டமான பகுதியில் வைக்க வேண்டும். இந்த இடத்தில் ஈரப்பதம் அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வெங்காயத்தை எங்கேயாவது எடுத்து செல்லும்போதோ, சேமிக்கும்போதோ, அந்த இடத்தில் 59 டிகிரி ஃபேரன்ஹீட் வெப்பம் உள்ளது போல பார்த்துக்கொண்டால் நல்லது.

இப்போது மழை காலம். அதனால், இந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அடுத்ததாக, வெங்காயத்தில் ஏதாவது அடி பட்டாலும், இந்தப் பூஞ்சை வந்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதனால், அறுவடை முதல் போக்குவரத்து வரை அனைத்தின் போதும் வெங்காயங்களை கையாள்வதில் கவனம் தேவை.

வெங்காயம் - கருப்பு பூஞ்சை
வெங்காயம் - கருப்பு பூஞ்சை

இந்தப் பூஞ்சை வெங்காயத்தை கடைசியில் என்னவாக மாற்றும்?

நாம் இப்போது வெங்காயத்தில் பூஞ்சையை பார்க்கிறோம் அல்லவா... அது தான் பூஞ்சையின் தொடக்கம்.

அதை நாளாக விட்டால், வெங்காயம் அழுகி கெட்ட நாற்றத்தை தரும். இது அருகில் இருக்கும் வெங்காயத்தையும் பாழாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

அதனால், வெங்காயங்களை வீட்டிற்கு வாங்கி வந்ததும், அவற்றை காற்றோட்டமான பகுதியிலும், சற்று வெப்பம் உள்ள பகுதியிலும் வைப்பது மிகவும் முக்கியம்.

பூஞ்சை உள்ள வெங்காயத்தை சாப்பிடலாமா... கூடாதா?

வெங்காயத்தின் மேல் தோலில் மட்டும் இந்தப் பூஞ்சை இருந்தால் கழுவி, அந்தத் தோலை நீக்கி வெங்காயத்தை பயன்படுத்தலாம்.

ஆனால், இந்த வெங்காயங்களைக் கழுவும் போது, கவனம் வேண்டும். பூஞ்சை உள்ள வெங்காயத்தை நல்ல வெங்காயங்களோடு கழுவுவோம். இந்த நேரத்தில் நல்ல வெங்காயங்களிலும் இந்தக் கருப்பு பூஞ்சை பரவலாம். அதனால் மிக கவனம் தேவை.

சிறிய அளவில் இருக்கும் இந்தப் பூஞ்சை ஆரோக்கியமாக இருக்கும் ஒருவருக்கு பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், தொடர் நீண்ட கால பயன்பாட்டில் ஆபத்து ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

இந்தப் பூஞ்சை நச்சு ஒன்றை வெளியிடும். அது சமைத்தால் கூட, போவதற்கான வாய்ப்புகள் குறைவு.

அதனால், கழுவினால் போய்விடும்... சமைத்தால் போய்விடும்... என்று நினைக்காமல், சேமிக்கும்போது கவனம் செலுத்த வேண்டும்.

வெங்காயம் - கருப்பு பூஞ்சை
வெங்காயம் - கருப்பு பூஞ்சை

இது என்ன பிரச்னையை ஏற்படுத்தலாம்?

கருப்பு பூஞ்சை என்பது அறுவடைக்கு பின்பு ஏற்படும் ஒன்று. இது வெங்காயத்தில் மட்டுமல்ல... பூண்டிலும் ஏற்படும்.

6 - 12 மணி நேரம் வெங்காயம் அல்லது பூண்டில் ஈரப்பதம் இருந்தாலே போதும், இந்தப் பூஞ்சை ஏற்பட்டுவிடும்.

இந்தப் பூஞ்சையை தொடர்ந்து சாப்பிட நேர்ந்தால் சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்படலாம், இதை தொடர்ந்து சுவாசிக்க நேர்ந்தால் சுவாச பிரச்னையை ஏற்படுத்தலாம்.

அதனால், வெங்காயத்தை சேமிக்கும்போது அதிக கவனம் செலுத்துங்கள்.”

Doctor Vikatan: சர்க்கரைநோய்: இன்சுலின் ஊசி போட ஆரம்பித்தால், மீண்டும் மாத்திரைகளுக்கு மாற முடியாதா?

Doctor Vikatan: எனக்கு கடந்த 15 வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. இத்தனை வருடங்களாக மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருந்தேன். இப்போது ஒரு மாதமாக இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டிருக்கிறேன். இன்சுலின் ஊசி போட ... மேலும் பார்க்க

`நாகரிகத்துக்காக தும்மலை அடக்க வேண்டாம்; உயிருக்கு ஆபத்தை உண்டாக்கலாம்!' - எச்சரிக்கும் மருத்துவர்

நிறைய பேர் நாகரிகத்துக்காக தும்மலை அடக்குகிறார்கள். தும்மலை அடக்கலாமா? நவீன மருத்துவம் என்ன சொல்கிறது? டாக்டர் கு. கணேசன் விளக்குகிறார். தும்மல்தும்மல் நல்லது!தும்மல் ஓர் அனிச்சைச் செயல். காற்று தவிர ... மேலும் பார்க்க

Doctor Vikatan: `பீரியட்ஸ் அவதிகள், ஆண்களும் உணர வேண்டும்' - நடிகை ராஷ்மிகாவின் பேச்சு சாத்தியமா?

Doctor Vikatan: பெண்களின் பீரியட்ஸ் அவதிகளை ஆண்களும் அவசியம் உணர வேண்டும் என சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கருத்து சொல்லியிருக்கிறார். பீரியட்ஸ் வலியைஉணரவென்றே பிரத்யேக கருவி இருப்பதாகச் சொல்கிறார்... மேலும் பார்க்க

``அந்த மசாலா கடவுளின் அமிர்தம் தான்'' - சித்த மருத்துவர் சிவராமன்

நம் வீட்டு சமையலறைகளில் மணக்கும் பெருங்காயத்தின் பலன்களைப் பட்டியலிடுகிறார் சித்த மருத்துவர் கு. சிவராமன். பெருங்காயம்பிசாசு மலமா; கடவுளின் அமிர்தமா?‘காலிப் பெருங்காய டப்பா’ எனத் தோற்றுப்போனவர்களைச் ச... மேலும் பார்க்க

இருமல் மருந்துக்கு புதிய கட்டுப்பாடு: மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்களைத் தொடர்ந்து, இருமல் மருந்துகளின் விற்பனையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல்... மேலும் பார்க்க

Doctor Vikatan: தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்குமா BP மாத்திரைகள்?

Doctor Vikatan: என் வயது 39. இன்னும் திருமணமாகவில்லை. கடந்த 6 மாதங்களாக ரத்த அழுத்தத்துக்கு மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். ரத்த அழுத்த மாத்திரைகள் (பிபி மாத்திரைகள்) எடுத்துக்கொள்வது ஒருவரது த... மேலும் பார்க்க