`கை எப்படி குளர்ச்சியாக இருக்கு?' - ஆசிரியை சித்ரவதையால் மாணவி தற்கொலை; அடுத்தடு...
திண்டுக்கல்: தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து; 23 பேர் காயம்; ஓட்டுநரின் மதுபோதைதான் காரணமா?
கம்பத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக பெங்களூர் சென்ற தனியார் பேருந்து தாடிக்கொம்பு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து அதிகாலை 2:30 மணி அளவில் சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தாடிக்கொம்பு காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 11 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 1 குழந்தை என 23 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில், 10 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை ஆகியோருக்கு சிறு காயங்கள்தான் என்பதால், அவர்கள் உடனடியாக சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

மேலும், பலத்த காயம் ஏற்பட்ட சுவாதி, குமுதா, தங்கம், முத்துச்செல்வம், சசி பிரபா, மற்றும் ரேகா ஆகியோருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தாடிக்கொம்பு காவல்துறையினர் விசாரணை செய்ததில் தனியார் பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.



















