ஆந்திரா: மாவோயிஸ்ட் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை - யார் இந்த மத்வி ஹித்மா?
மதுரை: குறுக்கே வந்த நாய்; இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த தம்பதி; பேருந்து ஏறி கணவர் இறந்த சோகம்!
நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்திலிருருந்து தவறி விழுந்த தம்பதியினர் அரசுப் பேருந்து மோதி, மனைவி கண் முன்னே கணவர் உயிரிழந்த சம்பவம் ,மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஜீவா நகர்ப் பகுதியைச் சேர்ந்த வெங்கடசுப்பு-பத்மாவதி தம்பதியினர் இன்று அதிகாலை அலங்காநல்லூர் செல்ல இரு சக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளனர். செல்லும் வழியில் சிக்கந்தர் சாவடி அருகே காமாட்சி அம்மன் நகர்ப் பகுதியில் திடீரென சாலையின் குறுக்கே பாய்ந்த நாய் மீது இரு சக்கர வாகனம் மோதி இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து இருவர் மீதும் மோதியதில் வெங்கடசுப்பு சம்பவ இடத்திலேயே மனைவியின் கண் முன்பே உடல் நசுங்கி உயிரிழந்தார், பத்மாவதிக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய நாயும் உயிரிழந்தது.

இந்த விபத்து குறித்து அலங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலைகளில் சுற்றித் தெரியும் நாய்கள் மற்றும் கால்நடைகளை கட்டுப்படுத்துவும், அவற்றையும், மக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்ம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மதுரை மாவட்ட நிர்வாகம் அது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, மதுரையில் நாளுக்கு நாள் சாலைகளில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் கால்நடைகளால் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.















